கோவிலில் பெண்களை இழிவுபடுத்திய வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வழக்காடத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

கோவிலில் பெண்களை இழிவுபடுத்திய வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வழக்காடத் தடை

சிங்கப்பூர், செப். 21- சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் வழிபட வந்த பெண்ணை தகாத வார்த்தைகள் கூறி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் தமிழ் வழக்குரைஞர் மீது நான்கு வெவ் வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 5 ஆண்டுகள் வழக்காட சிங்கப்பூர் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதனை அடுத்து அவர் வகித்து வந்த அனைத்து அமைப்புகளின் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார் 

எம்.ரவி என்ற தமிழர் 15.9.2023 அன்று சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் நுழைந்து ‘சாமி கும்பிட்டுக்‘ கொண்டு இருந்த பெண் ணிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் அப்பெண்ணைத் தாக்கி காயப் படுத்தினார். மேலும் தான் ஒரு வழக் குரைஞர் என்று மிரட்டியுள்ளார்.  

மேலும் அவர் அங்கிருந்து வெளியே சென்ற பிறகு பெண் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்ட மற்றொரு பெண்ணை யும் தாக்கி உள்ளார். இது தொடர்பாக அப்பெண்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு, பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது. பெண்களை தாக்கி காயம டையச் செய்தல் மற்றும் பதவியைக் கூறி அச்சுறுத்தியது தொடர்பான கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

இதை 17.9.2023 அன்று காவல்துறை செய்தியறிக்கையாக வெளியிட்டது. அதில் “ரவி என்ற தமிழர் வழக்குரை ஞராக பணிபுரிந்து வருகிறார். அவர் கோவிலில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். இது தொடர்பாக தட்டிக்கேட்டப் பெண்ணை தனது பதவியைக் கூறி மிரட்டி அறைந்து தள்ளிவிட்டுள்ளார். அப்போது அப் பெண் சுவற்றில் மோதி காயமடைந்து உள்ளார்.

இதைத் தட்டிக்கேட்ட அவரது தோழியையும் தகாத வார்த்தைகள் கூறி யும், விபச்சாரி என்றும் திட்டியுள்ளார், விசாரணையில் அவர் மீதான குற்றச் சாட்டு அனைத்தும் உறுதி செய்யப் பட்டது.

அவர் வழக்குரைஞர் என்பதால் நீதி மன்ற அனுமதிக்குப் பிறகு அவரை விசாரணைக்கு அழைத்து மருத்துவப் பரிசோதனை செய்தோம், மேலும் அவர் மீது  ஏற்கெனவே அநாகரீகமாக நடந்துகொண்ட  இரண்டு குற்றச்சாட்டு கள் நிலுவையில் உள்ளன. தனது பதவியைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியுள்ளார்  அவர் மீது நடவ டிக்கை எடுக்க தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்), அனுமதி அளித் ததைத் தொடர்ந்து காவல்துறை அவரை விசாரணைக்கு அழைத்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கை வந்த பிறகு அவர் வரும் 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விசாரணை முடி யும் வரை சிறை வைக்கப்படுவார். 

தற்போது அவர் அடுத்த 5 ஆண்டுகள் வழக்குரைஞர் பதவியில் இருந்து நீக்கப்படுவது மட்டுமல்லாமல், எந்த அமைப்பிலும் பொறுப்பு வகிக் கவும், சட்ட ஆலோசனை தொடர்பான நட வடிக்கையில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக நீதிமன்றம் கூறி யுள்ளது.

No comments:

Post a Comment