ரூ.410 கோடியில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

ரூ.410 கோடியில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, செப் 24 சென்னையில் 3 திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 2,364 அடுக்குமாடி குடியிருப்பு களுக்கான பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தர்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கொய்யாதோப்பு, சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவ ராஜ் நகர், கோட்டூர்புரம் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பில் 2,364 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப் படவுள்ளன. இதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சர்பில் சேப் பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கொய்யாதோப்பு பகுதி, எழும்பூர் சட்டப்பேரவை தொகுதிக் குள்பட்ட மீனாம்பாள் சிவராஜ் நகர்பகுதியில் -1973-ஆம் ஆண்டும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூர் புரம் பகுதியில் 1974-ஆம் ஆண்டும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட் டப்பட்டன. இந்த குடியிருப்புகள் சிதிலமடைந்து காணப்பட்டதால் அங்கு பொதுமக்கள் வாழத் தகுதி யற்ற இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிதிலமடைந்த குடியிருப் புகள் அகற்றப்பட்டு ரூ.409.74 கோடி மதிப்பில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்றார் அவர்.விரைவில் 6 ஆயிரம் குடியிருப்புகள்: தொடர்ந்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறைஅமைச் சர்தா. மோ.அன்பரசன் பேசியதா வது:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சர்பில் 30 திட்டப்பகுதிகளில் 7,582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1,627.97 கோடி மதிப்பில் 9,522 வீடுகள் கட்டுவதற்கு பூர்வாங்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் 8 திட்டப் பகுதிகளில் ரூ.606.01 கோடி மதிப்பில் 3,511 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 திட்டப்பகுதிகளில் 1,021.87 கோடி மதிப்பீட்டில் 6,011 குடியிருப்புகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இப்பணிகள் 18 மாதத்தில் நிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். 

இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும் என்றர் அவர். கால்பந்து மைதா னம்: தொடர்ந்து, ‘சிங்காரச் சென்னை 2.0’ திட் டத்தின் கே.பி. பர்க் பகுதியில் ரூ.1.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கால் பந்து விளையாட்டு மைதா னத்தையும், எழும்பூர் சட்டப் பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடத்தையும், சேத்துபட்டு மேயர்சத்தியமூர்த்தி சாலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 39 ஸ்மர்ட் வகுப்பறையையும் அமைச் சர்உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர்ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment