எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப். 11- சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, சைதாப்பேட்டை யில் உள்ள கிண்டி அரிமா சங்க லேபர் காலனி உயர்நிலைப்பள்ளி யில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (10.9.2023) தொடங்கி வைத்தார்.

இதேபோல, சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி, கோட்டூர்புரம் சென்னை உயர் நிலைப்பள்ளி, கிண்டி மடுவின் கரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. சிறப்பு முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1 கோடியே  43  லட்சம் குடும்பங்கள் பயனாளி களாக சேர்க்கப்பட்டு உள்ளது.

இதில் 853 அரசு மருத்துவ மனைகள், 969 தனியார் மருத் துவமனைகள் என மொத்தம் ஆயிரத்து 822 மருத்துவ மனைகளில் காப்பீட்டுத் திட் டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெறலாம். மருத்துவக் காப்பீட்டு திட்டத் தில் அங்கீகரிக்கப்பட்ட மருத் துவமனைகளில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா காப்பீட்டுத் திட்ட பயனாளி களுக்கும் சிகிச்சை வழங்கப் படுகிறது.

கடந்த ஆட்சியில் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.699ஆக இருந் தது. இது தற்போது ரூ.849 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மருத் துவமனைகளின் எண்ணிக்கை 970இ-ல் இருந்து ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது. இதே போல, "இன்னுயிர் காப்போம்" திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் பயன்பெற்று உள்ளனர். இதன் மூலம் செலவழிக்கப் பட்டுள்ள தொகை ரூ.159 கோடியே 48 லட்சம் ஆகும். 

இதில், 237 அரசு மருத்துவ மனைகள், 455 தனியார் மருத்து வமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் இந்த திட்டம் பயன்பாட்டில் உள் ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டமாக விளங்கிக் கொண்டி ருக்கிறது. மேலும், கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைக்கப்படும் என அறிவித்தி ருந்தோம்.

அந்த வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல் கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடி செலவில் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மய்யம் ஒன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான இடம் தேர்வு செய்து, திட்டப்பணிகள் மற்றும் வரைபடப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. 

விரைவில் ஒப்பந்தப் பணிகள் தொடங்கப்பட்டு முதலமைச்ச ரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், மாநக ராட்சி மண்டல குழு தலைவர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment