இன்னும் பசி அடங்கவில்லையா ஆளுநர் அவர்களே? 'நீட்' வேண்டாம் - மகனின் தற்கொலையை அடுத்து அரசுக்கு கோரிக்கை விடுத்து தன்னுயிரையும் மாய்த்த தந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

இன்னும் பசி அடங்கவில்லையா ஆளுநர் அவர்களே? 'நீட்' வேண்டாம் - மகனின் தற்கொலையை அடுத்து அரசுக்கு கோரிக்கை விடுத்து தன்னுயிரையும் மாய்த்த தந்தை

சென்னை, ஆக. 14 -  இரண்டுமுறை 'நீட்' தேர்வெழுதி தேர்ச்சி பெறாத நிலையில் தன்னுயிர் மாய்த்துக் கொண்ட மகனின் பிரிவைத் தாங் காமல் நீட் தேர்வு இனியாவது மகன்களின் உயிரைப் பறிக்கக் கூடாது. அதை தடை செய்யுங்கள் என்று கடிதம் எழுதிவைத்து தந் தையும் தன்னுயிர் மாய்த்துக் கொண்ட நிகழ்வு தமிழ்நாடு முழு வதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குரோம்பேட்டை குறிச்சி நகரில் வசித்த வந்தவர் செல்வசேகர். இவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரன்(19). கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் 12ஆம் வகுப்பு முடித்த இவர் வகுப்பிலேயே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் அதன் பிறகு மருத்துவம் படிக்கும் எண் ணத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 

இதற்காக தனியார் நீட் பயிற்சி மய்யத்தில் படித்து, 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் ஜெகதீஸ்வரன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மய்யத்திற்கு அழைத்துச் சென்ற செல்வ சேகர், விண்ணப்பப் படி வத்தை பூர்த்தி செய்துவிட்டு முன் பணமும் செலுத்தி இருக்கிறார். இதனிடையே தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த ஜெகதீஸ்வரன் சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வர னின் தந்தை, ”என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகி றார்கள். அது நிறுத்தப்பட வேண் டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல றிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி யால் தந்தையும், மகனும் அடுத்த டுத்து தற்கொலை செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அனிதா முதல் சுபசிறீ வரை சுமார் 30க்கும் மேற் பட்ட நன்கு படிக்கும் மாணவச் செல்வங்களை இழந்த சூழலிலும் ஆளுநர் இறுமாப்பாக நீட் வேண் டும். அதை எதிர்கொள்ளாத மாணவர்கள் கோழைகள் அறிவிலிகள் என்று மறைமுகமாக தொடர்ந்து பேசிவருகிறார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நீட் தடை மசோதாவிற்கு நான் ஒருபோதும் கையெப்பமிட மாட்டேன் என்று மிகவும் கூறி னார். அதை எதிர்த்த பெற்றோர் களுக்கு ஆளுநர் மாளிகை மைக் கைப் பிடிங்கி மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment