அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு விலக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு விலக்கு


புதுடில்லி, ஆக. 17
- பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நியமிக்கப்பட் டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ராகுல் காந்தி, அமர் சிங் ஆகியோர்¢ நியமிக்கப்பட் டுள்ளனர்.

இதேபோல வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீல் குமார் ரிங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநி யோகத் துறைக்கான நாடாளு மன்ற நிலைக் குழுவில் தேசிய வாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் பி.பி.முக மது நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத் துறைக் கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். 

அவரின் தகுதி நீக்கத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதி மக்களவைச் செயலகம் ரத்து செய்ததை யடுத்து அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரா னார். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019ஆ-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் தொடர் பாக பேசிய உரை சர்ச்சையானது. இந்த உரை தொடர்பாக குஜராத் நீதிமன்றத்தில் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதற்கிடையே மோடி பெயர் அவமதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி மீது ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதி மன்றம் ஒன்றில் பிரதீப் மோடி என்ற வழக்குரைஞர் ஒருவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் திவிவேதி, ராகுல் காந்திக்கு விலக்கு அளித்து நேற்று (16.8.2023) உத்தரவிட்டார். அதேநேரம் இந்த வழக்கில் சாட்சிகளை விசாரிக்கும்போது அவர் ஆஜ ராகவில்லை என்றால் மீண்டும் அவர்களை விசாரிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.

No comments:

Post a Comment