கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறாக ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் தற்காலிக நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறாக ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் தற்காலிக நீக்கம்

சென்னை, ஆக. 8 -  மதம் தொடர்பாக ஒலிப்பதிவு வெளியிட்ட புளியந் தோப்பு போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டுள்ளார்.

சென்னை புளியந் தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளராக ராஜேந் திரன் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த வாரம், மதம் தொடர்பாக வாட்ஸ் அப் குரூப்பில் பேசிய ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

அதில், ஆய்வாளர் ராஜேந்திரன், கிறிஸ் தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் மூலம் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் கவனத்துக்கு வந்தது. 

உடனே ஆணை யர் ஒலிப்பதிவு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநகர போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் மயில்வாகன னுக்கு உத்தரவிட்டார். 

அதன்படி இணை ஆணையர் மயில் வாகனன், ஆய்வாளர் ராஜேந்திரனிடம் விசா ரணை நடத்தி அதற்கான அறிக்கையை சென்னை காவல் ஆணையரிடம் அளித்தார். 

அதைதொடர்ந்து, மதம் தொடர்பாக கருத் துகளை ஒலிப்பதிவாக பதிவிட்ட புளியந் தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந் திரனை, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment