அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி., வருமானவரி பிடித்தம் - திரும்பப் பெற வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி., வருமானவரி பிடித்தம் - திரும்பப் பெற வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.29- அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி. வருமானவரி பிடித்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற் சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் (AFCCOM) நிருவாக குழு கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

தஞ்சாவூரில் 27.8.2023 அன்று இவ்வமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வாழ்வாதாரத்தை காக்கவே வழியற்று நிற்கும் ஏழை எளியவர்களின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசி முதிர்வடையும்போது கிடைக்கும் தொகை ஒரு லட்சம் ரூபாய்கும் மிகுதியாக இருந்தால் 5 சதவிகிதம் வருமான வரி பிடித்தம் செய்வதோடு ஏறத்தாழ 7 சதவி கிதம் ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்ய வேண்டுமென பிறப்பித்த ஒன்றிய அரசின் உத்தரவை தாமதமின்றி திரும்பப் பெற வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையை வைக்காததற்காக அபராதத் தொகை பிடித்தம் செய்யும் தவறான நடை முறையை தாமதமின்றி திரும்பப் பெற பொதுத்துறை வங்கிகள் முன்வர வேண்டும்.

அனைத்து மாவட்ட தலைநக ரங்களிலும் இந்திய ஸ்டேட் வங்கி மருந்தகங்களை நிறுவுவதோடு தேவையான, தரமான மருந்துகளை வழங்க முன்வர வேண்டும் என்று இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்துக்கு துணைத் தலைவர் டி.வி.சந்திர சேகரன், பொருளாளர் திருச்சி என்.சுப்பிரமணியன், துணை செயலாளர் மதுரை எம்.முரு கையா, இந்திய ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

உதவிப் பொருளாளர் வீ.பூமி நாதன், நிருவாக குழு உறுப் பினர்கள் திருச்சி எம்.சந்திரா கில்பர்ட், திருவாரூர் என்.பாண்டு ரங்கன், புதுச்சேரி எஸ்.கருணா கரன், வேலூர் ஆர்.லோகநாதன்,  செயலாளர் எம்.கே.மூர்த்தி, உரத்த நாடு வி.சம்பத் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித் தனர். 

No comments:

Post a Comment