வரலாற்றில் இன்று... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

வரலாற்றில் இன்று...

திராவிடர் கழகம் உதயமான நாள்
அண்ணாதுரை தீர்மானம்

கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் 27.8.1944 சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநில மாநாட்டில் "திராவிடர் கழகம்" பெயர் மாற்றத் தீர்மானத்தை தந்தை பெரியார் அவர்களே எழுதி தந்து, அண்ணாவின் பெயரில் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதற்கு "அண்ணாதுரை தீர்மானம்" என்றே பெயரிட்டார்.

அப்பொழுது அண்ணா அவர்கள் 'திராவிட நாடு' இதழினைக் காஞ்சிபுரத்திலிருந்து நடத்திக் கொண்டு இருந்தார். அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைச் சந்திக்க ஈரோடு சென்று விட்டதால், அந்தக் குறிப்பிட்ட 'திராவிட நாடு' இதழ் ஈரோட்டிலேயே 'குடிஅரசு' அச்சிடப்படுகின்ற தமிழன் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு இதழ்கள் தோழர் ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களால் காஞ்சிபுரம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்தே ஏஜண்டுகளுக்கும், முக்கிய நீதிக்கட்சித் தலைவர்களுக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை 'குடிஅரசு' இதழில் அப்படியே இங்கு தருகிறோம்.


No comments:

Post a Comment