ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா

ஜெயங்கொண்டம், ஆக.30 -  ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.08.2023 அன்று 17ஆவது  விளையாட்டு நாள் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. 

விளையாட்டு நாள் காலை 9 மணியளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இவ்விளையாட்டு நாளுக்கு சிறப்பு விருந்தினர்களாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன், சி.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முதலாவதாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி யின் தாளாளர் பொன்னாடை அணிவித்து  நினைவுப் பரிசு வழங்கி சிறப்புச் செய்தார்.

பள்ளி மாணவர்களின் ஒரு மித்த கூட்டு முயற்சியுடன் கூடிய அணிவகுப்பு மத்தள ஒலியின் இசைக்கு ஏற்ப கர்ஜிக்கும் சிங்கங்களைப் போல  சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை என வண்ணக் கொடிகளை கையில் ஏந்தியவாறு வீரநடையிட்டு வந்து நிதானம், நேர்மை, துணிவு, கம்பீரம்  ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக  அணி வகுத்து வந்தது கண்களை கவரும் வகையில் இருந்தது. 

சிறப்பு விருந்தினர் தேசியக் கொடியை ஏற்றி விழாவினை இனிதே தொடங்கிவைத்தார்.  எல்கேஜி மற்றும் யுகேஜி மழலை யர்கள் கிளவுஸ் பயிற்சியும் (Glouse drill) முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் மின்மினி பூச்சி மின்னுவது போல அழகாக மின்னிக் கொண்டுவந்து (Pim Pom drill) பிம்பாம் பயிற்சி செய்து காட்டியும் பார்வையாளர்க ளைப் பரவசப்படுத்தினர்.


மூன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ_ மாணவிகள் வண்ணக் கொடிகளைக் கையில் (Flag drill) வைத்து செய்த காட்டிய பயிற்சி பார்வையாளர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த் தியது.

ஆறாம் வகுப்பு முதல் எட் டாம்  வகுப்பு வரை பயிலும் மாணவ _ மாணவிகள் உடம்பை வளர்த்து உயிரை காக்கும் யோகக் கலையைச்  செய்து காட்டி உடல், மனம், அறிவு மற்றும் உணர்வின் சமன் பாட்டிற்கு உதவும் மருந்தில்லா மருத்துவத்தை  வலியுறுத்தினர்.

மேலும்  தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை மாணவ மாணவிகள் செய்து காட்டியவிதம் அனைவரையும் கவர்ந்தது.

மேலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மனிதனின் சுவாசம் மற்றும் ரத்த ஓட்டத் தைத் தூண்டும் ஏரோபிக் உடற் பயிற்சியும்,  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் வண்ண பந்துகளை வைத்து கொண்டு செய்து காட்டிய பயிற்சியும் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள் லெசிம் இசைக் கருவிகளைக் கொண்டு செய்து காண்பித்த பயிற்சியும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

கூட்டு முயற்சி, தோள் வலிமை, விவேகம் ஆகியவற்றால்    குடை வடிவம், மலை வடிவம், வட்ட உருவாக்கம், கோபுரம்  போன்ற பலவிதமான  பிரமிடு கட்டமைப்புகளை மாணவ _- மாணவியர் செய்து காட்டி அசத்தினர். 

காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச் சந்திரன் தனது சிறப்புரையில் "நம் நாட்டின் எதிர் காலம் மாணவர்களின் கையில்தான் உள்ளது. மாணவர்கள்தான் விரும்பும் பாடத்தைக் கற்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் விருப்பத் தினை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. விளையாட்டுத் துறையில்  ஆர்வமுள்ள மாணவர்கள் படிப் பிலும் முன்னிலையில் திகழ்வார்கள்.

விளையாட்டின் மூலம் உட லும் உள்ளமும் பலமடை யும், ஆகையால் அனைத்து மாணவர் களும் விளையாட்டுத் துறையில் கலந்துகொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.

மேலும் "மாணவர்கள் கைப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தவிர்த்து கல்வியில் மேன்மை யடைய வேண் டும்" என்று கூறினார்.

உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தனது சிறப்புரையில், அறிவார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு மாணவரும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும். 

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையின்  இட ஒதுக் கீட்டில் கல்வி மற்றும் பணியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது"  என்று எடுத்துரைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான் றிதழ்களும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இது மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் விளை யாட்டுப் போட் டிகள் நடைபெற்றன. இப்போட் டிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களை ஒரு குழந்தையாக நினைத்துக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர். 

போட்டிகளில் வென்ற பெற்றோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் இப்பள்ளியின் தாளா ளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் பகிர்ந்து கொண் டனர். 

இவ்விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறை வடைந்தது.

No comments:

Post a Comment