ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக் கூட ஆள் இல்லை தரையில் வீசப்பட்ட தக்காளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக் கூட ஆள் இல்லை தரையில் வீசப்பட்ட தக்காளி

பெங்களூரு, ஆக. 29 - கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டது. இதன் காரணமாக சந்தைகளுக்கு தக்காளி வரத்தும் குறைந்து போனது. இதனால், தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனையானது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சுமார் 2 மாதங்களாக தக்காளி விலை ரூ.100-க்கு குறையாமல் இருந்து  வந்தது. இதனால் தக்காளி வியாபாரிகள் நல்ல லாபம் சம் பாதித்து வந்தனர். தக்காளி விற்று பல விவசாயிகள் லட்சாதிபதியா கினர். மேலும் தக்காளி திருட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக எங்கு பார்த்தாலும் தக்காளியைப் பற்றிய பேச்சாகவே இருந்து வந்தது.

தக்காளி விலை அதிகரித்ததால் ஏராளமான விவசாயிகள் தக்கா ளியை பயிரிடத் தொடங்கினார் கள். இதனால் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள் ளது. ஒரு கிலோ தக்காளி 

ரூ.10-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளி டம் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.1 முதல் ரூ.5 வரை வாங்கப்படுவதாக சொல்லப் படுகிறது.

இதனால் விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தைகளுக்கு தக்காளி குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று (27.8.2023) மைசூரு ஏ.பி.எம்.சி. மார்க்கெட் டுக்கு தக்காளியை கொண்டு வந்த விவசாயிகள், போதிய விலை கிடைக்காததால் அதனை சாலை யோரம் வீசிச் சென்றனர். மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தக்காளி பயிரிட்டும், சரியான விலை கிடைக்கவில்லையே என புலம்பி சென்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தங்கத்துக்கு இணையாக பார்க்கப்பட்ட தக்காளி, தற்போது சாலையில் வீசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment