அம்பலமான ஒன்றிய அரசு நெடுஞ்சாலைத்துறையின் ஊழல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

அம்பலமான ஒன்றிய அரசு நெடுஞ்சாலைத்துறையின் ஊழல்


புதுடில்லி, ஆக. 17
- மோடி அரசின் ஊழல் வெளி யாகி அம்பலமாகி உள் ளது. துவாரகா விரைவுச் சாலை திட்ட மதிப்பீடு ரூ528 கோடியில் இருந்து ரூ7238 கோடியாக மாறியது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். 

டில்லியில் இருந்து அரியானா மாநிலம் குரு கிராமிற்குச் செல்லும் துவாரகா விரைவுச் சாலை 29 கிமீ பணி மேற் கொள்ளப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ528.80 கோடி மதிப்பீடு செய்யப் பட்டது. 

ஆனால் ரூ.7238.20 கோடியாக அதிகரிக்கப் பட்டது. இதனால் ரூ6700 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக மத் திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழல் அரசு என்று காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். 

இதுபற்றி அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: உள் கட்டமைப்பு திட்டங் களில் மோடி அரசு ஊழ லில் ஈடுபட்டுள்ளது. அது தேசத்தை நரகத் திற்கு அழைத்துச் செல்கி றது. ‘பாரத்மாலா பரியோ ஜனா’ நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையா ளர் (சிஏஜி) அறிக்கை இதை சுட்டிக்காட்டு கிறது. பிரதமர் மோடி தனது அரசியல் எதிரிக ளின் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன்பு தனது ஆட்சியில் நடக்கும் ஊழ லையும் அவர் பார்க்க வேண்டும். பாஜ ஆட்சி யின் ஊழலும், கொள்ளை யும் தேசத்தை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது.பாரத்மாலா பரியோ ஜனா  டெண்டர் ஏல செயல்முறையின் தெளி வான மீறல் மற்றும் பெரும் நிதி முறைகேடு ஆகியவற்றை சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது. இந்த திட்டத்தில் மோசடி நடந்துள்ளது என்பதற்கு அப்பட்டமான உதார ணங்களில் ஒன்று துவா ரகா விரைவுச்சாலை.

இந்த திட்டத்திற்கான செலவு முதலில் ரூ 528.8 கோடியாக மதிப்பிடப் பட்டது. ஆனால் பின் னர் ரூ 7,287.2 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இது 1,278 சதவீதம் அதிகரிப்பு என்று சிஏஜி அம்பலப்படுத்தி உள் ளது. துவாரகா விரைவுச் சாலை எந்த ஒரு விரிவான திட்ட அறிக்கையும் இல் லாமல் மதிப்பிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட சுங்கச் சாவடிகள் திட்டத்தின் மூலதனச் செலவை மீட் டெடுப்பதில் இடையூறு விளைவிக்கும். மேலும் பயணிகளுக்கு தேவை யற்ற நிதிச்சுமையை ஏற் படுத்தும். பிரதமரே, உங் கள் அரசியல் எதிரிக ளுக்கு எதிரான ஊழ லைப் பற்றி நீங்கள் பேசும் முன், நீங்கள் உங்கள் ஆட்சியை ஒருமுறை பார்க்க வேண்டும். ஏனென் றால் அதை நீங்களே மேற்பார்வையிடுகிறீர் கள். 2024இல், இந்தியா உங்கள் அரசை இதற் கெல்லாம் பொறுப்பேற் கச் செய்யும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment