‘விடுதலை'க்கு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

‘விடுதலை'க்கு விருது

நாடு விடுதலைப் பெற்றது 

77 ஆண்டுகளுக்கு முன்பு!


மணிப்பூரில் படுகொலைகள்

கற்பழிப்புகள் 

இன அழிப்பும் இணைந்து கொண்டது!


ஆளும் ஒன்றிய அரசும்

மணிப்பூர் பாஜக அரசும்

அமைதிக் காத்தன!


மானுடம் மறத்துப்போனது

மதவெறி ஆட்சியில்!


சாதி கற்பிக்கப்பட்டது

கற்பித்தவர்கள் உயரத்தில்

ஏற்றவர்கள் பள்ளத்தில்


மதம் ஒரு மாயை

நம் நாட்டிலோ அது ஒரு போதை

போதையை உண்டவன்

கல்லைப் பார்த்தாலும்

காக்கையைப் பார்த்தாலும்

அஞ்சுவார்கள்


பூசைகள் போடுவார்கள்

பணத்தை கொட்டுவார்கள்


எல்லாவற்றுக்கும் விடியல் உண்டு

என்பார்கள்


யாகம் வளர்ப்பார்கள்

நெய்யை நெருப்பில் கொட்டு


பணப்பையை என்னிடத்தில் நீட்டு 

என்பார்கள்


சாமிகளும் உண்டு

சாமியார்களும் உண்டு 

இரு தரப்பினருக்கும்

பல‌ மாமியார்களும் உண்டு


உண்டு கொழுப்பவன் உயர்ந்தவன்

கொடுத்து இளைத்தவன் தாழ்ந்தவன் 


எத்தனை எத்தனை ஏமாற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளாய்!


ஈரோட்டு பயணம் தொடங்கியது

சனாதனத்தை சாய்க்கும் பயணம்

மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் பயணம்

மானம் காக்கும் பயணம்

அறிவைப் போற்றும் பயணம் 

சமத்துவ பயணம்

சமூக நீதிப் பயணம்


இந்த நெடும் பயணத்தில்

பெரியாரோடு

அறிஞர் அண்ணா

கலைஞர்

நாவலர்

பேராசிரியர்

என பல ஆளுமைகள்

இன்று அவர்கள் இல்லை


ஆனால் பெரியார் பாதையில்

ஆசிரியர் வீரமணியார் பயணம்

தொடர்கிறது


ஓராண்டா இல்லை ஒன்பதாண்டா

இல்லை! இல்லை!!

ஓன்பது பத்தாண்டுகள்

பயணம்

40 முறை சிறைவாசம்

என்ன வியப்பு!


இன்றைய முதல்வர்

அன்றைய மிசா கைதி

அரவணைத்தவர் ஆசிரியர்

சிறையில் 1976 ஆம் ஆண்டில் 


என்ன வியப்பு!

இன்றோ தகைசால் தமிழர் விருது

ஆசிரியர் வீரமணியார் பெறுகிறார்

அளித்து மகிழ்பவர் தமிழ்நாட்டின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்


விடுதலை நாளில்

‘விடுதலை' ஆசிரியருக்கு விருது


விடுதலை சிறக்கிறது

விடுதலை நாளும் எழுச்சியுறுகிறது


80 ஆண்டுகள் தொய்வில்லா 

தொண்டிற்கு விருது


60 ஆண்டுகள் ‘விடுதலை'யின்

ஆசிரியராக இருந்து

ஆற்றிய அரும் பெரும்

எழுத்துப் பணிக்கு விருது


90 அகவையிலும்

சமூக நீதிக்காக களம் காணும் வீரருக்கு விருது


பெரியாரின் தொண்டர்கள்

அக மகிழ்கின்றனர்


அண்ணாவின் தம்பிகள் போற்றுகின்றனர்


கலைஞரின் உடன்பிறப்புகள்

எழுச்சிப் பெறுகின்றனர்


தமிழர் தலைவருக்கு

தகைசால் தமிழர் விருது அளித்து போற்றிய

தமிழ்நாட்டின் முதல்வர் 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு

தன்மான தமிழர்கள் 

நன்றிகளை நவில்கின்றனர்.


ஆசிரியர் வீரமணியார் 

பல்லாண்டு வாழ்க! வாழ்கவே!


தொண்டறம் தொடரட்டும்!

பெரியாரியல் வெல்லட்டும்!


பேராசிரியர்.மு.நாகநாதன்


No comments:

Post a Comment