ஈரோடு சிவகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

ஈரோடு சிவகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

சிவகிரி, ஆக. 9 - ஈரோடு - சிவகிரியில் அண்ணா கலையரங்கில் திரா விடர் கழகம் சார்பில் "முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு, பழைய கோட்டை தளபதி ந. அர்ச்சுனன் (முதல் பொருளாளர் திராவிடர் கழகம்) நூற்றாண்டு, வைக்கம் போராட்டம் நூற் றாண்டு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம்  5.8.2023 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய திரா விடர் கழக தலைவர் கே.எம். கைலாசம் தலைமை தாங்கினார். மாவட்டக் காப்பாளர் சிவகிரி கு.சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  கொடு முடி மேற்கு ஒன்றிய தி.மு.க செய லாளர் ப.நடராஜன், பேரூராட் சித் தலைவர் பிரதீபா கோபிநாத், பேரூர் தி.மு.க செயலாளர் அ. கோபால், கொல்லன் கோயில் பேரூராட்சித் தலைவர் பூ.சந்திர சேகர், சி.பி.எம் நகர செயலாளர் சசி, சி.பி.அய் ஒன்றிய செயலாளர் ரா.ரத்தினவேல், மாவட்ட மக ளிரணி ஜெயலட்சுமி கைலாசம், தாண்டாம் பாளையம் தா.கு. அன்பரசு நகர கழகத் தலைவர் வேணுகோபால், இ.தே.காங் கிரஸ் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், பொதுக் குழு உறுப்பினர் கோ.பால கிருட்டிணன், மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு, மாநகர செயலாளர் தே.காமராஜ், திருப் பூர் மாவட்ட துணைத்தலைவர் முத்து முருகேசன், ஈரோடு தேவேந்திரன், தங்கராஜ், பெரியார் பிஞ்சு சோபிகா, குமரகுருபரன், கபிலன், மோகன், பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண் முகம் தொடக்கவுரையாற்றினார்.

பேராசிரியர். ப.காளிமுத்து உரையாற்றியதைத் தொடர்ந்து மாவட்ட தி.மு.க இலக்கிய அணித்தலைவர் சிவகிரி கு. இளஞ்செழியன் தனது உரையில் திராவிடர் இயக்க சாதனைகள் பற்றியும் கலைஞர் ஆற்றிய பணி, திராவிடர் கழக முதல் பொரு ளாளர் தளபதி ந.அர்ச்சுனன் இளவயதில் தந்தைபெரியாருக்கு நம்பிக்கைக்கு உரியவராக விளங் கியதை விளக்கமாக எடுத்துக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து திரா விடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். அவரது உரையில் "முத்தமிழ றிஞர் கலைஞர் தந்தை பெரியார் கொள்கைகளை அரசு சட்டங் கள் மூலமாக நிறைவேற்றினார். குறிப்பாக பெண்களுக்குச் சொத்துரிமை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை, தமிழ்நாட்டில் ராஜாஜி குலக் கல்வித்திட்டத்தை கொண்டுவர முயற்சித்தார் இதைத் தந்தை பெரியார் மிக கடுமையாக எதிர்த்தார்.  

பின்னர் காமராஜர் முதல மைச்சரான பிறகு ஊர்தோறும் பள்ளிகள் திறக்கப்பட்டன-திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்காக கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள்தான் கல்வி உதவித் தொகை திட்டம், படித்த பெண்குழந்தைகளுக்கு திருமண உதவித் திட்டம். சீருடை, புத்த கப்பை, லேப்டாப், காலணி, நோட்டு புத்தகம் என பல திட்டங்களை கொண்டுவந்தார். இதன்மூலம் பெண்களின் கைகளில் கரண்டி பிடிப்பதற்குப் பதிலாக புத்தகங்களை பிடிக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நனவாக்கியவர் கலைஞர். 

இன்று காவி ஒன்றிய அரசு கலவரங்களைத் தூண்டி மதவெறியை ஊட்டி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள் - நாம் ஏமாறக்கூடாது, கலவரத்தை உருவாக்கும் காவி வேண்டாம்... மக்களைக் காக்கும் திராவிட மாடல் ஆட்சியின் கறுப்பு. சிவப்பே வேண்டும்." என்று தமது சிறப்புரையில் சிறப்பாக எடுத்துக் கூறினார். 

இறுதியாக ஒன்றிய செயலா ளர் திராவிடமணி நன்றி கூற கூட்டம் முடிந்தது.

ஊர் முழுக்க கழகக் கொடி கள், பிளக்ஸ்-ம் வைக்கப்பட்டி ருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகிரி - தந்தைபெரியாரின் கருத்துக் களமாக உருவாகும் அளவிற்கு இளைஞர்கள், பெண்கள்அதிகமாகக் கூட்டத் திற்கு வருகை தந்து பேச்சைக் கடைசிவரையில் கேட்டது நம் பிக்கையளித்துள்ளது.

No comments:

Post a Comment