பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வென்ற தூத்துக்குடிப் பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வென்ற தூத்துக்குடிப் பெண்

மதுரை, ஆக  18- தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது:- 

கடந்த 2018ஆ-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக் குடிக்கு சென்ற விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத் தில் அப்போதைய தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், தற்போ தைய புதுவை, தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந் தரராஜனும் பயணித்தார். 

தூத்துக்குடியில் விமானத் தில் இருந்து இறங்கியபோது ஒன்றிய அரசை விமர்சித்து நான் முழக்கம் எழுப்பினேன். இதனால் கோபம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என் னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இது தொடர்பான புகாரின்பேரில் காவல்துறை என் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.இவ் வாறு மனுவில் கூறி இருந்தார். 

இந்த வழக்கு ஏற்கெனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற் கிடையே லூயிஸ் சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது ஆளுநராக பதவி வகித்து வருவதால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக் கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். மேலும் தற்போதைய தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை தன்னையும் இந்த வழக் கில் ஒரு தரப்பினராக சேர்க்கக் கோரி மனுதாக்கல் செய்தார். அவரது மனுவும் ஏற்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் மீதான புகாரில், சென்னை பெருநகர், மதுரை, கோவை நகர் பகுதிகளில் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக் கப்பட்ட சட்டப்பிரிவின்கீழ் மனுதாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி காவல் துறையினருக்கு இந்த பிரிவில் வழக்குபதிவு செய்ய அதிகாரம் இல்லை. மேலும் இதற்கு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அனு மதியும் பெறவில்லை. எனவே மனுதாரர் மீதான வழக்கு சட் டப்படி ஏற்பு டையதல்ல என்று வாதாடினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் லூயிஸ் சோபியா மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தர விட்டார்.

No comments:

Post a Comment