ஒன்றிய அரசில் வேலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

ஒன்றிய அரசில் வேலை

ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-மிமிமி பிரிவில் 19, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 5 (ஏரோநாட்டிக்கல் 1, கெமிக்கல் 1, கம்ப்யூட்டர் 1, எலக்ட்ரானிக்ஸ் 1, மெட்டலர்ஜி 1), மத்திய உளவுத்துறை துணை அதிகாரி 4, ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் 1, ஹார்வஸ்ட் டெக்னாலஜிஸ்ட் 1 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஸ்பெஷலிஸ்ட் பிரிவுக்கு எம்.பி.பி.எஸ்., சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட், உளவுத்துறை பணிக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.8.2023 அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட், ஹார்வஸ்ட் பிரிவுக்கு 40, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25, பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 31.8.2023

விவரங்களுக்கு:  upsconline.nic.in

No comments:

Post a Comment