டில்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

டில்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, ஆக. 17- டில்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை (என்.எம்.எம்.எல்), 'பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூல கம் (பி.எம்.எம்.எல்)' என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்து உள்ளது. இந்த பெயர் மாற்றம் கடந்த 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக, அருங்காட்சியகத்தின் செயற் குழு துணைத்தலைவர் 'எக்ஸ்' வலைதளத்தில் கூறியிருந்தார். 

ஒன்றிய அரசின் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு காங் கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதன் நோக்கம், நேருவின் மரபை மறுப்பதும், அவமதிப்பதுமே என அந்த கட்சி சாடியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

ஒரு சிறந்த நிறுவனம் புதிய பெயர் பெற்று இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூல கம், பிரதமர்கள் நினைவு அருங் காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

நமது முதல் மற்றும் நீண்ட கால பிரதமரை பார்த்து மோடிக்கு பெரும் அச்சங்கள், சிக்கலான தன்மைகள் மற்றும் பாதுகாப்பின்மைகள் உள்ளன. நேருவையும், நேருவின் மரபி னையும் மறுத்தல், திரித்தல், அவ தூறு செய்தல் மற்றும் அழித்தல் என்ற ஒற்றை நிகழ்ச்சி நிரலையே அவர் கொண்டிருக்கிறார். 

பிரதமர் மோடி என்.எம்.எம்.எல்-ல் உள்ள 'என்'அய் அழித்து விட்டு அதற்கு பதிலாக 'பி' என்று சேர்த்துள்ளார். அந்த பி என்பது உண்மையில் சிறுபிள் ளைத்தனம் மற்றும் கோபத்தின் வெளிப்பாடு ஆகும். ஆனால் சுதந்திர போராட்டத்தில் நேரு வின் மாபெரும் பங்களிப்பையும், இந்திய அரசின் ஜனநாயக, மதசார்பற்ற, அறிவியல் மற்றும் தாராளவாத அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைக ளையும் மோடி மற்றும் அவரது பக்க மேளம் அடிப்பவர்களால் அழிக்க முடியாது என்று ஜெய் ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

பிற பிரதமர்களுக்கும் இட மளிக்கும் வகையில் இந்த கட்ட டத்தை விரிவுபடுத்தும் யோச னையை நானும் ஏற்கிறேன். உண்மையில், அனைத்து பிரத மர்களின் பங்களிப்புகளையும் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அறிந்து கொள்ள ஊக்கு விப்பது நல்லது. அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.ஆனால், இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்திய பிரதமர், சுதந்திரத் திற்குப் பிறகு முதல் பிரதமராக இருந்தவர், இதுவரை நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரையும் நீக்குவது அற்பமானது.

'நேரு நினைவு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' என்று நீங்கள் தொடர்ந்து அழைத் திருக்கலாம். இந்த அற்பத்தனம் கெட்ட வாய்ப்பானது. இது நமது சொந்த வரலாறு மீதே ஒரு குறிப் பிட்ட கசப்பைக் காட்டுகிறது. நல்ல பெரும்பான்மையைக் கொண்ட இந்த அரசுக்கு இது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். 

பெரும்பான்மையுடன் கூடிய அரசிடம் இருந்து பெருந்தன் மையையே மக்கள் எதிர்பார்க் கிறார்கள். இவ்வாறு சசிதரூர் கூறினார். இதைப்போல மாணிக்கம் தாகூர் நாடாளு மன்ற உறுப்பினர், சுப்ரியா சிறீ நாடே என காங்கிரஸ் தலை வர்கள் பலரும் ஒன்றிய அரசை குறைகூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment