பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

பிற இதழிலிருந்து...

வாழ்க; தகைசால் தமிழர் ஆசிரியர் வீரமணி!

முரசொலி செல்வம் 

தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது” இம்முறை மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது! விருது அறிவிக்கப்பட்ட முதலாண்டு கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது! அடுத்த ஆண்டு நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. அப்போதே அந்த விருது பெருமைப்பட்டது; இந்த ஆண்டு ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு அந்த விருதினை தமிழ்நாட்டு முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் வழங்கி,  அந்த விருதுக்குப் பெருமை சேர்த்ததுடன் அதற்கு மெருகும் தீட்டியுள்ளார்.

ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக 10 வயதிலே மைக்கைப் பிடித்துக் கொள்கைப் பிரச்சாரம் செய்யத் துவங்கி, 90 வயது கடந்தும் தான் வரித்துக் கொண்ட கொள்கையிலிருந்து தடம் மாறாது, அதனால் ஏற்படும் ஏற்றம் இறக்கம் குறித்து சிறிதும் கவலைப்படாது, அதே நேரத்தில் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிற உத் வேகத்தோடு சுற்றிச் சுழன்று கொண் டிருக்கும் அந்தத் தன்னலமற்ற தியாகச் செம்மலுக்கு இந்த விருது கிடைத் ததால், விருது பெருமை பெற்றுள்ளது!

ஆசிரியர் வீரமணி அவர்களைப் பொறுத்த வரை அவர் விருது, பதவி, இவைகளை விட தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டன், அவரது கொள்கை விசுவாசி என்ற முத்திரை தன்மீது பதிக்கப்படுவதையே விரும்பி யவர்! அவரது அரசியல் வாழ்வில் என்றுமே பட்டம், பரிசுகள் பெற வேண்டும் என்ற எண்ணம். தலை தூக்கியதே இல்லை. அவர் மட்டும் விரும்பியிருந்தால் எத்தனையோ பெரிய பதவிகளைப் பெற்றிருக்க முடியும்!

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தவிர்த்த அரசியல் எடுபடாது என்ற நிலையில், திராவிட இயக்கப் போர்வையில் தோன்றிய சில புது இயக்கங்கள் தங்கள் இயக்கத்துக்கு திராவிட இயக்க அங்கீகாரம் பெற்றிட ஆசிரியர் வீரமணியின் கடைக்கண் பார்வை கிட்டாதா என்று காத்திருந்த காலங்கள் உண்டு!

அந்தக் காலகட்டங்களில் மானமிகு வீரமணி நினைத்திருந்தால், எத்தனையோ பதவிகளை, பரிசு களை ஏற்று ராஜ வாழ்க்கை நடத்தியிருக்க இயலும்! அந்த நேரங்கள்கூட அவரை அசைத்திட முடியவில்லை! அவரது அரசியல் வாழ்வு என்பது அர்ப் பணிப்பு வாழ்வாகவே அமைந்து விட்டது! அது மட்டுமல்ல; நமது இளைஞர் களுக்கு அது ஒரு பாடமாக அமைந்துள்ளது!

இன்றைய இளைஞர்களில் பலர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப் பினர், அமைச் சர்கள் போன்ற பதவிகளுக்காக அரசியல் இயக்கங்களில் தங்களை இணைத்துச் செயல் படுவதைக் காண்கிறோம்! ஆனால் பத்து வயது பாலகனாக அன்று அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படத் துவங்கிய ஆசிரியர் வீரமணி அவர்கள், 90 வயதைக் கடந்தும் எந்தப் பதவியும் எதிர்பாராது தந்தை பெரியாரின் ஜாதி, மத, பேதமற்ற சமத்துவ சமுதாயம் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் - அதற்கு உழைப்ப வர்களுக்கு உறுதுணையாகச் செயல்படுவேன் என்ற உள்ளார்ந்த உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்!

“தகைசால் தமிழர் விருது”க்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் வீரமணி, தலைவர் கலைஞர் ஒருமுறை குறிப்பிட்டபடி,

“பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்துகொண்டு, பள்ளியிலும் பயின்று, கல்லூரியிலும் பட்டம் பெற்று திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டனாக விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப் பருவத்திலே மேடையிலே பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்”.

ஆம், தன் தளிர் பருவத்திலேயே ஆற்றலை அள்ளித்தெளித்த அந்தப் பெருமகன்தான் இன்று “தகைசால் தமிழர்” விருதைப் பெறுகிறார்!

இந்த விருதுக்கு ஆசிரியர் வீரமணியைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாடு முதல மைச்சர் தளபதி ஸ்டாலினை எப்படிப் புகழ்வது என்றே புரியவில்லை. அன்று பெரியவர் சங்கரய்யா தேர்வு முதற் கொண்டு, இன்று ஆசிரியர் வீரமணி தேர்வு வரை அவரது முடிவுகள் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆழ்ந்த தெளிந்த முதிர்ச்சிக்கு அடையாளங்களாக வெளிப்படு கின்றன!

இன்றைய கால கட்டங்களில் பலநேரங்களில் பலருக்குத் தரப்படும் பட்டங்கள் - பவிசு இழந்து நிற்கும் நிலையில், பத்தோடு இதுவும் ஒன்று தானே என்ற பரிதாப நிலையை அடைந்திடும் நேரத்தில், முதல மைச்சர் தளபதி ஸ்டாலின் ‘தகைசால் தமிழர்’ பட்டங்களுக்குத் தேர்ந் தெடுக்கும் தகுதிமிக்கவர்களால், ஆற்றலாளர்களால், தன்னலமற்று சமுதாய சேவை செய்பவர்களால் அந்தப் பட்டங்கள் மீண்டும் பெருமை பெறத் தொடங்கிவிட்டன.

வாழ்க; தகைசால் தமிழர் ஆசிரியர் வீரமணி!

நன்றி: 'முரசொலி', 2.8.2023


No comments:

Post a Comment