மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் : நிதிஷ்குமார் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் : நிதிஷ்குமார் கருத்து

பட்னா, ஆக.30 நாடாளு மன்றத் தேர்தலை முன் கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக அய்க் கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் முதலமைச் சருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதகா வும், எதிர்க்கட்சிகள் பிரச் சாரம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் எல்லா ஹெலிகாப்டர்களையும் முன்கூட்டியே பாஜக முன் பதிவு செய்துவிட்டதாகவும் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட் சியின் தலைவருமான மம்தா  குற்றம்சாட்டி இருந்தார்.

நாளந்தா பல்கலைக்கழகத் தில் புதிய கட்டத்தை திறந்து வைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்தியாளர் களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி களின் ஒற்  றுமையால் காலப்போக்கில் பாஜக அதிக நட்டத்தை சந்திக்க நேரிடும் என்று பாஜக அஞ்சுவதால், மக்களவைத் தேர்தலை முன் கூட்டியே நடத்த திட்டமிடுவ தாக கூறினார். மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற் கடிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எனக்கு  தனிப் பட்ட லட்சியங்கள் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். 

பாஜகவுக்கு எதிராக ’இந்தியா’ கூட்டணி யில் அதிக கட்சிகளை ஒன்றி ணைப்பதே எனது ஒரே விருப்பம் என்று அவர் கூறினார். பீகாரில் எடுக்கப் பட்ட ஜாதிவாரி கணக் கெடுப்பு குறித்த தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த கணக்கெடுப் புகள் பிற்படுத்தப்பட்டோர் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்காக அரசு பாடுபட உதவும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.


No comments:

Post a Comment