கிராமசபை கூட்டங்களில் அயோடின் உப்பு பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

கிராமசபை கூட்டங்களில் அயோடின் உப்பு பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவு

திருப்பூர் ஆக.10  கிராமசபை கூட்டத்தில்,  அயோடின் உப்பு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட் சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட் சிகளிலும், சுதந்திர தினமான வரும், 15ஆம் தேதி, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.அன்று காலை, 11:00 மணிக்கு துவங்கி, நடைபெறும். கிராம ஊராட் சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைக்கப்படும்.

பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள்; ஆன்லைன் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துதல், ஜல் ஜீவன் திட்டம், நூறு நாள் வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டம்; மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமை திட்டம் என, 13 அம்சங்கள்குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபைக்காக, ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, கிராம வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment