ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் தமிழ்நாட்டின் சாதனையைக் கெடுக்க வரும் நீட் தேவையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் தமிழ்நாட்டின் சாதனையைக் கெடுக்க வரும் நீட் தேவையா?

தமிழ்நாட்டில் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்பைக் குலைக்க மேற் கொள்ளப் படும் முயற்சிதான். ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரியாக ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை. 1000 பேருக்கு 0.8 மருத்துவர் என்பது தான் நிலை. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் 1250 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதுதான் நிலை. ஆனால் தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதாவது 250 பேருக்கு ஒரு மருத்துவர். 

இது இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரியை விட 5 மடங்கு சிறப்பான வளர்ச்சி.

இதே புள்ளி விவரத்தை இன்னொரு வகையில் சொல்வதானால் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் எட்டு மருத்துவர்களில் நிச்சயமாக ஒருவர் தமிழ்நாட்டுக்காரர்.  உலகில் உள்ள வளர்ந்த நாடுகளான ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை விடவும் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவர்களின் சராசரி அதிகம்.

மக்கள் நல்வாழ்வை மேம்படுத்தும் இந்த நிலை நீட் தேர்வால் இன்னும் பத்து ஆண்டுகளில் மிக மோசமான அழிவைச் சந்திக்கும்.  இப்போது சொல்லுங்கள்...

நீட் தேர்வு இல்லாமல் தமிழ்நாடு சாதித்திருக்கிறதா இல்லையா?

தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வை கெடுக்க வரும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? 

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(புள்ளிவிவரப் படம் - நன்றி: சுரேஷ் சம்பந்தம், 

ட்ரீம் தமிழ்நாடு)

No comments:

Post a Comment