ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி

இம்பால், ஆக.11 மணிப்பூரில் இரு சமூகத் தினர் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தத் தின்படி அமைதி பேச்சுகளை விரைவாக முடிக்கும்படி நாகா சமூகத்தினர் பேரணி நடத்தினர். 

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், வன்முறை நிகழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில், 2015 இல் ஒன்றிய அரசுடன் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் அமைப்பு பேச்சு நடத்தியது. இதைத் தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் செய்யப் பட்டது. ஆனால், இறுதி ஒப்பந்தம் கையெ ழுத்தாகவில்லை. மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்தி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங் கள் நடந்து வருகின்றன. மணிப்பூரின் மலைப் பகுதிகளில் நாகா மற்றும் குகி - ஜோ சமூகத்தினர் வசித்து வருகின்றனர். குறிப் பாக தமேங்லாங்க், சேனாபதி, உக்ருல், சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாகா மக்கள் பெருமளவு வசிக்கின்றனர்.

ஒன்றிய அரசுடன் ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமைதி பேச்சுகளை விரைவாக நடத்தி, ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி, நாகா மக்கள் பேரணி நடத்தினர்.

அய்க்கிய நாகா கவுன்சில் என்ற அமைப் பின் சார்பில் இந்த பேரணி நடந்தது. இதற்கு, குகி சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மணிப்பூர் சட்டமன்றத் தின், 60 உறுப்பினர்களில், 10 பேர் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், ஏழு பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். அமைதி ஒப்பந் தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி, வரும் 21 இல் துவங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில், இந்த 10 சட்டமன்ற உறுப்பினர் கள் பங்கேற்கக் கூடாது என, நாகா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

No comments:

Post a Comment