மருத்துவத் துறையில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு மொரிசியஸ் நாட்டின் அமைச்சர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

மருத்துவத் துறையில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு மொரிசியஸ் நாட்டின் அமைச்சர் பாராட்டு

சென்னை, ஆக.24  மருத்துவத் துறையில் தமிழ்நாடு பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது என்று மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கை லேஷ் குமார் சிங் ஜகுத்பால் தெரிவித்தார். 

சென்னை தலைமை செயலகத் தில்  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த மொரிசியஸ் நாட் டின் சுகாதாரத்துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பால் தமிழ்நாட்டில் மருத்துவச் சேவை கழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகள், மருந்து மற்றும் உபகர ணங்கள் கொள்முதல் குறித்து கேட்டறிந்தார். 

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், மொரிசியஸ் நாட்டின் உயர் ஆணையர் (இந்தியா) தில்லம், தலைமை நிர்வாக அலுவலர் செவ்ருட்டுன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப் பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 

மொரிசியஸ் நாட்டின் சுகா தாரத் துறை அமைச்சர் கைலேஷ் குமார் சிங் ஜகுத்பாலிடம் தமிழ் நாடு மருத்துவ சேவை கழகத்தின் செயல்பாடுகள், தமிழ்நாட்டி லுள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.

24.8.2023 இன்று மொரிசியஸ் சுகாதாரத்துறை அமைச்சர்கள் குழு அண்ணாநகர்மருந்து கிடங்கு, எழும்பூர் மருத்துவ சேவை கழகத்தின் அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். ஏற்கெ னவே சென்னை அகர்வால் மருத் துவமனை மற்றும் காவேரி மருத் துவமனையை பார்வையிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் போது மானஅளவு மருந்துகள் கையிருப் பில் உள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை பொறுத்த வரை சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுந ருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் உள்ளார் என்று கூறினார்.

மொரிசியஸ் நாட்டின் சுகா தாரத்துறை அமைச்சர் கைலேஷ் குமார்சிங் ஜகுத்பால் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “மொரிசியல் நாட்டுக்கும், தமிழ் நாட்ட்டிற்கும் பழங்காலங்களில் இருந்தே நல்ல நட்பு இருக்கிறது. எங்கள் நாட்டின் பிரதமர் ஆலோசனையின்படி தமிழ்நாட் டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வந் தோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தோம். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. மருத்துவத்துறையில் தமிழ்நாடு பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது. மருத்துவ சேவைகள் மிகச்சிறப்பாக இங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது” என்றார். 


No comments:

Post a Comment