ரயில் நிறுவனத்தில் உதவியாளர் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

ரயில் நிறுவனத்தில் உதவியாளர் பணி

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறு வனத்தில் (ஆர்.அய்.டி.இ.எஸ்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் 16 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் 50%, மற்றவர்கள் 45% மதிப் பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

தேர்வு மய்யம்: டில்லி, கோல்கட்டா, மும்பை, நாக்பூர், அய்தராபாத், பெங்களூரு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசி நாள்: 4.9.2023

விவரங்களுக்கு: rites.com


No comments:

Post a Comment