எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்

சென்னை, ஆக 22  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இணையத்தில்தொடங்கி நடைபெற்று வருகிறது.

 தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர்சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நிறைவடைந்தது. பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையம் மூலமம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் விளையாட்டு வீரர், மேனாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்றுத் திறனாளி ஆகியவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவும் நடைபெற்றது. 

இந்நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக வுள்ள இடங்கள் மற்றும் இடஒதுக் கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்ட காலியிடங் களை நிரப்புவதற்கான இரண் டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது. இன்று (22-.8.2023) மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகா தாரத்துறை இணையதளங்களில் பதிவு செய்யலாம். 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் 28-ஆம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வுசெய்ய வேண்டும். 29, 30-ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரி களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 31-ஆம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்படும். செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செப்டம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment