குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

 மணிப்பூர் விவகாரம்:

நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்துக! 

புதுடில்லி, ஆக.3 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் சொல்லுங்கள்  என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் வலி யுறுத்தி உள்ளனர். நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின் றனர். கடந்த ஜூலை 26-ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் தாக்கீது வழங் கினார். 

இதன் மீது வரும் 8-ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ‘இந்தியா’ கூட் டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குழுவினர் கடந்த வாரம் மணிப்பூர் சென்று, கலவரத்தால் பாதிக்கப்பட்ட வர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டனர். இந் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள் ளிட்ட 31 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள்  சந்தித்து, ஒரு மனு கொடுத்தனர். பின்னர், செய்தி யாளர்களிடம் கார்கே கூறிய தாவது:

மணிப்பூரில் கடந்த 3 மாதங் களாக கலவரம் நடந்து வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.500-க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். 5 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வல மாக இழுத்துச் செல்லப்பட்ட காட்சிப் பதிவு வெளியாகி உள்ளது. ஆனால், கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் அரசும் ஒன்றிய அரசும் உரிய நட வ டிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்த வேண்டும் என முர்முவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பிரதமர் அங்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மணிப்பூர் மாநிலத் தின் இரு சமுதாய பிரிவை சேர்ந்த 2 பெண்களை மாநிலங் களவை உறுப்பினராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள அரியாணா மாநிலம் நூ பகுதியில் மத ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பற்றி ஒன்றிய அரசு கவலைப்பட வில்லை. எனவே, அரியானாவில் கலவரம் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment