அமெரிக்காவில் ஹிந்துத்துவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

அமெரிக்காவில் ஹிந்துத்துவா?


தேசியக் கொடிக்கு பதிலாக பஜ்ரங் தள் கொடி, தென் இந்தியர்களை 'விடுதலை' நாள் விழா கொண்டாட விடாமல் விரட்டியடித்தனர் ஹிந்துத்துவ அமைப்பினர்.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரின் எடிசன் பகுதியில் தென் இந்தியர்கள் நடத்திய விடுதலை நாள் கொண்டாட்டத்தின் போது அங்குள்ள கோவிலில் இருந்த சில நபர்களும் அங்கே உள்ள ஹிந்துத்துவ அமைப்பினரும் சேர்ந்து விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கு இடைஞ்சல் செய்யும் நோக்கில் பஜ்ரங் தள் மற்றும் விசுவ ஹிந்து பரிசத்தின் கொடிகளை ஏந்திக்கொண்டும் நாட்டுப்பண் பாடிக்கொண்டு இருக்கும்போது ஜெய் சிறீராம், ஹிந்து தேஷ் ஹமாரா தேஷ் (ஹிந்து நாடு எங்கள் நாடு) ஜண்டா பக்வா ஹமாரா( காவிக்கொடி எங்கள் கொடி) என்று கூறிக்கொண்டும் விடுதலை நாள் கொண்டாத்தை கொச்சைப் படுத்தியும், கொண்டாடிய தென் இந்தியர்களை காலாகுசா (கருப்பு நிறத்தவர்களே) என்று வசவு மொழியில் கத்திக்கொண்டும் இருந்தனர். 

கடந்த ஆண்டு இவர்கள் விடுதலை நாள் விழாவில் புல்டோசரில் மோடி மற்றும் உத்தரப்பிரதேச சாமியார்  முதலமைச்சரின் படத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதற்கு விடுதலை நாள் கொண்டாட்டக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்த போது, எங்கள் உரிமையில் தலையிடவேண்டாம் என்று மிரட்டினர்.

இந்த ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளிகள் உள்ளிட்ட தென் இந்திய குழுக்களை கருப்பர்கள் என்று வசவுச்சொல் கூறியது மட்டுமல்லாமல், நாட்டுப்பண் இசைக்கும்போது வேண்டு மென்றே ஜெய் சிறீராம், ஹர ஹர மகாதேவே, போலோ ஜெய்சிவ்சங்கர் கீ என்று விசுவஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் வன்முறையின் போது கூறும் சொற்களை அமெரிக்காவிலும் கூச்சலிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment