90 நிமிடங்கள் வரையில் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை பிரதமர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

90 நிமிடங்கள் வரையில் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை பிரதமர்

புதுடில்லி, ஆக. 11 மக்கள வையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியி லேயே வெளிநடப்பு செய்து வெளியில் வந்த னர். 

எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கூறுகையில், 

‘‘நாங்கள் பிரதமரிடம் மணிப்பூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்று மாறு கேட்டுக் கொண் டோம். அவரது உரையில் 90 நிமிடம வரையிலும் மணிப்பூர் என்ற வார்த்தையையே குறிப்பிடவில்லை. அவர் முழுக்க முழுக்க அரசியல் உரையை நிகழ்த்தினார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது பழைய தாக்குதல்கள், அவமதிப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரவில்லை.

இது முற்றிலும் அரசியல் பேச்சு. புதிதாக ஒன்றுமில்லை? நமக்கு தெரியாத எந்த செய்தியை அவர் தேசத்திற்கு சொன்னார்? மொத்தத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி எதையும் அவர் பேசவில்லை’’ என்றார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரசின் கவுரவ் கோகோய் கூறுகையில், 

‘‘இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 2 நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், மற்றொன்று, மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடி பேச வேண்டும். நீண்ட காலத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி அவையில் பேசுவதை நாடு பார்க்க முடிந்தது. அவரது மவுனத்தை நாங்கள் கலைத்துள்ளோம்.

ஆனால் மணிப்பூருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. பிரதமர் மோடி தனது பொறுப்பிலிருந்து தப்பி ஓடுகிறார்’’ என்றார். திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறுகையில், 

‘‘மணிப்பூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடந்துள்ள வன்முறை நிகழ்வுகள் பற்றிய நிலை குறித்து பிரதமர் பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ அரசியல் பேச்சை கொடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கம், மணிப்பூர், அரியானா மற்றும் வன்முறை நடைபெறும் பிற பகுதிகள் தொடர்பாக பிரதமரின் பதிலை கேட்பதுதான். பிரமதர் மோடி பேசுகையில் நாங்கள் பலமுறை தலையிட்டும் அவர் மணிப்பூர் பற்றியே பதிலளிக்கவில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment