பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 8 அடி உயர வெண்கல சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 8 அடி உயர வெண்கல சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஆக.10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.8.2023) சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறை யின் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இன மானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 8 அடி உயரத்தில் வெண்கலத்தாலான  முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும், ‘இனமானப் பேரா சிரியர்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களால் பெருமிதத்தோடும் அழைத்துப் போற்றப் பட்டவர் பேராசிரியர் க.அன்பழகனார் ஆவார்.

பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முது கலைப் பட்டப் படிப்பை முடித்தார். 

பேராசிரியர் க.அன்பழகன், பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற நாள்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டு, பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிர மாக ஈடுபடுத்திக் கொண்டார். 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பின ராகவும், தொடர்ந்த 9 முறை சட்டமன்ற உறுப் பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக, தான் அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தினார். 

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளரு மான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின்  நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த 30.11.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளி யிட்ட அறிவிப்பில், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற் றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழ கனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் க. அன்பழகன்  கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புகளை செயல் படுத்தும் வகையில், கடந்த 19.12.2022 அன்று சென்னை, நுங்கம்பாக்கத் திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற் றாண்டு நிறைவு விழாவில், அவ் வளாகத்திற்கு “பேராசிரியர் க. அன் பழகன் கல்வி வளாகம்” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளை வினையும் தமிழ்நாடு முதல மைச்சர் திறந்து வைத்தார். 

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதல மைச்சர் இன்றைய தினம் சென்னை, நுங்கம் பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் க.அன் பழகன் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப் பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்  துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்  அ. வெற்றியழகன், துணை மேயர் மு. மகேஷ் குமார், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்  மரு. இரா. செல்வ ராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக் குநர் த. மோகன், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment