போக்குவரத்து துறையில் 685 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

போக்குவரத்து துறையில் 685 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: ஓட்டுநர் பணியுடன் கூடிய நடத்துநர் பணியில் 685 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.1.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 24 - 40, மற்றவர்கள் 24 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: கனரக வாகன ஓட்டுநர் உரிமம், 18 மாதம் இதற்கான அனுபவம், முதலுதவிச் சான்று, நடத்துநர் உரிமம் (1.1.2023க்கு முன்) பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தது 50 கிலோ எடை, 160 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 590.

கடைசி நாள்: 18.9.2023 மதியம் 1:00 மணி

விவரங்களுக்கு: tns tc.onlinereg.in

No comments:

Post a Comment