சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம் இஸ்ரோ தலைவர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம் இஸ்ரோ தலைவர் தகவல்

திருவனந்தபுரம், ஆக. 29 - இஸ்ரோ சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில் சென்று பாராட்டினார்.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் திருவனந்த புரத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம். இதற்காக கடந்த 4 ஆண் டுகள் கடினமாக உழைத்தோம். ரோவர் லேண்டரில் இருந்து இறங்க சற்று தாமதமானதை தவிர மற்ற பிரச்சினை ஏதும் இல்லை.

முதல் 14 நாட்களுக்கு பிறகு நிலவில் இருட்டாக இருக்கும். அதனால் தான் பிரக்யான் ரோவரின் செயல் திறன் 14 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 

எனவே 14 நாட்களுக்கு பிறகு ரோவரின் பணி முடங்கி விடும். 

அதற்கடுத்த 14 நாட்களில் ரோவரின் செயல்பாடு குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது.

No comments:

Post a Comment