சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகள் ஏலம் பெங்களூரு நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 29, 2023

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகள் ஏலம் பெங்களூரு நீதிமன்றம் ஆணை

பெங்களுரு, ஆக. 29 - சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்க ளூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு கூறியது. 

இந்த தீர்ப்பை கருநாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால் மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம், தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தர விட்டது. இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா மரணம் அடைந்து விட்ட காரணத்தால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப் பட்டது.

சசிகலா உள்பட மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுப வித்தனர். சசிகலாவும், இளவரசி யும் அபராத தொகையை செலுத் தினர். ஆனால் சுதாகரன் அபராத தொகையை செலுத்தாததால் கூடு தலாக ஓராண்டு சிறைத் தண் டனையை அனுபவித்தார்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட 29 வகையான பொருட்களை ஏலம் விட கருநாடக அரசுக்கு உத்தர விடக் கோரினார். இந்த மனு மீது நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வரு கிறது.

இதற்கிடையே தாங்கள் ஜெய லலிதாவின் வாரிசுகள் என்பதால் அவரது சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி அந்த தனி நீதிமன்றத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்தநிலையில் பொருட்களை ஏலம் விடக்கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நேற்று (28.8.2023) விசாரணைக்கு வந்தது.

கருநாடக அரசு சிறப்பு வழக் குரைஞர் கிரண் ஜவளி சார்பில் அவரது இளநிலை வழக்குரை ஞரும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் அதிகாரியும் ஆஜர் ஆனார் கள். வழக்கு விசாரணையின் போது, கருநாடக அரசு வழக்குரை ஞர், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடப்படக்கூடிய சொத்துகள் குறித்த பட்டியலை மூடிய கவரில் தாக்கல் செய்தார். 

அதைத்தொடர்ந்து நீதிபதி மோகன், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளை மட்டுமே ஏலம் விட முடியும் என்றும், புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 28 வகையான பொருட் களை ஏலம் விட முடியாது என் றும் கூறினார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முடக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் உள்ள வைப்புத் தொகை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடி தம் எழுதி அதன் டெபாசிட் விவ ரங்களை பெற வேண்டும் என்று கோர்ட்டு அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்த 30 கிலோ தங்க, வைர நகைகள் உள் ளிட்ட நிறுவனங்களின் சொத்து களின் இன்றைய மதிப்பு குறித்தும் தெரிவிக்கும்படி அரசு வழக்குரை ஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

தீர்ப்பில் கூறியுள்ளபடி 30 கிலோ தங்க, வைர நகைகள் உள் ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகை யில் ரூ.100 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், மீத முள்ள தொகையில் ரூ.5 கோடியை கருநாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறி னார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 31ஆம் தேதிக்கு (வியாழக் கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment