அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

பட்டுக்கோட்டை, ஆக.18- பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 9.8.2023 புதன் அன்று மாலை  6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திராவிடர் கழக மாநில பகுத்தறிவு கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளரும். பட்டுக் கோட்டை கழக மாவட்ட தலைமை கழக பொறுப்பாளருமான முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமையிலும், மாவட்ட கழகத் தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் முன்னிலையிலும் நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பிகோட்டை வை.சேகர் வரவேற்புரையுடன் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் கடவுள் மறுப்பு  கூறினார். 

தொடர்ந்து ஏனாதி ஆசைபாண்டி, மண் டலக்கோட்டை சரவணன், பட்டுக்கோட்டை நகர பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அழகரசன்,  எட்டுபுளிக்காடு பாலையன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செய லாளர் கருப்பூர் முருகேசன், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கனக.இராமச்சந்திரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக தலைவர் சி.செகநாதன், பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர் மன்னங்காடு ம.சிவஞானம், மாவட்ட கழக தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், மாவட்ட  கழக விவசாய அணி அமைப்பாளர் குறிச்சி பழ.வேதாசலம், மாவட்ட கழக வழக் குரைஞர் அணி தலைவர் அ.அண்ணாதுரை, கழக மாவட்ட துணைச் செயலாளர் அ.காளி தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செய லாளர் புலவஞ்சி இரா.காமராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இரத் தினசபாபதி திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லதம்பி ஆகியோர் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

திராவிடர் கழக மாநில பகுத்தறிவு பிரச் சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தனது தலைமை உரையில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் 1000 வினா-விடை தேர்வாக இருந்தாலும், பெரியாரியல் பயிற்சி வகுப்பாக இருந்தாலும், செயல்பாடுகளாக இருந்தாலும் மாநிலத்திலேயே பட்டுக்கோட்டை கழக மாவட்டம்தான் முதல் இடத்தில் உள்ளது என்பதை எடுத்துக் கூறியும், தோழர்கள் இப்போதுபோல் வருங்காலத்திலும் தன் முனைப்பு காட்டாமல் இயக்கம் தலைமை காட்டும் திசை நோக்கி பயணித்து வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என கூறினார்.

பட்டுக்கோட்டை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேனாள் நகர செயலாளர் மறைந்த ரோசா  இராசசேகரன் மறைவுக்கும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் பேராசிரியர் முனைவர் கரு.கிருஷ்ணமூர்த்தி யின் தாயார் கரு.பாப்பம்மாளின் மறைவுக் கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல் தெரி வித்து வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள் கின்றது எனவும், 

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் தகைசால் விருதினை தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வழங்கிட ஆணையிட்ட தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களுக்கு இக்கலந்துரையாடல் கூட்டம் தனது நன்றியையும் பாராட்டுகளை யும் தெரிவித்துக் கொள்கின்றது எனவும், 

வைக்கம் நூற்றாண்டு கலைஞர் நூற் றாண்டு, ‘திராவிட மாடல்' ஆட்சி சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடத்துவது எனவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து கிராமங்களிலும் அமைப்புகளை உருவாக் குவது எனவும், 

வருகின்ற செப்டம்பர் 17 அன்று அறி வாசான் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் பிறந்தநாளை கிளைகள்தோறும் திராவிடர் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மாலைகள் அணிவித்தும் தந்தை பெரியார் சிலை உள்ள ஊர்களில் மாலை அணிவித்தும் தோழர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பாக கொண்டாடுவது எனவும், 

வருகின்ற அக்டோபர் இரண்டாம் நாள் சுயமரியாதை குடும்ப விழாவை பட்டுக் கோட்டை நகரத்தில் சிறப்பாக கொண் டாடுவது எனவும், 

குடும்ப விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள கழகத் தோழர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜூலை 29ஆம் நாள் பட்டுக்கோட் டையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி வரவு செலவு தோழர்களால் சரிபார்க்கப்பட்டு கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பட்டுக்கோட்டை ஒன்றிய கழகச் செய லாளர் ஏனாதி சி.ரெங்கசாமி  நன்றி கூறினார். 

No comments:

Post a Comment