படித்ததும் பகிர்தலும் - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

படித்ததும் பகிர்தலும் - 2

நூல்: ரசிகமணியின் நாத ஒலி
ஆசிரியர்: தீப.நடராஜன்
வெளியீடு: பொதிகைமலைப் பதிப்பு, சென்னை - 5

“பொருள் இல்லை; யாருக்கும் விளங்குவதில்லை” சமஸ்கிருத மந்திரங்கள் பற்றி ரசிகமணி டி.கே.சி.

14.5.1949 அன்று மகராஜன் அவர் களுக்கு எழுதியதில் ஒரு பகுதி:

“இங்கே ஒரே கும்மாளிதான். எல்லாருமாகச் சேர்ந்து பெண் ணைத் தாக்குகிறது. மாப்பிள்ளை யும் அதில் கலந்து கொள்வான். அப்படியே மாப்பிள்ளைக்கும் மண்டகப்படி நடக்கும். அதில் பெண் சேர்ந்து கொள்ளும், அப்படி யானால் கும்மாளிக்குக் கேட்பா னேன்!

இந்த வேடிக்கைகளைப் பார்க்க ரூ.5/- கொடுத்து டிக்கட்டு வாங் கலாம்.

இப்படியெல்லாம் கோலாகல மாய் இருக்கிற. சந்தர்ப்பத்தில் கரடியைப் பிராமண போஜனத்தில் விட்ட மாதிரி பத்துப் புரோகிதர்கள் இன்று காலை வந்து மாப்பிள்ளைக் காக ஒரு கிரியை நடத்தினார்கள். ஓமம் வளர்த்தார்கள். காற்று வாக் கில் மாப்பிள்ளை, சதாசிவம், எம்.எஸ். மூன்று பேரையும் ஓமகுண் டத்தை ஒட்டி உட்காரச் செய் தார்கள். ஓமாக்கினியும் புகையும் மூவரையும் வேண்டுமென்றே தாக் கின. அவைகளோடு வர்மம் நிற்க வில்லை. புரோகிதர் சமஸ்கிருதத் தில் மந்திரங்களை அசுரக் குரலில் உச்சரித்தார். அநேகமாய் “இங்கே உட்காரு, எழுந்திரு, உட்காரு, கையை நீட்டு, என் கையில் போடு, கிழக்கே பார்த்து உட்காரு, அவர் கையில் போடு” என்பதாக மந்திரங் கள் வளைத்து வளைத்துச் சொல் லிக்கொண்டே இருந்தார்கள்.

இரண்டரை மணி நேரம் எல்லோரையும் பாடாய்ப் படுத்தி விட்டார்கள். பொருளோ இல்லை; மடக்கி மடக்கிச் சொல்லலாம், யாருக்கும் விளங்குவதில்லை.

இப்படி ஒரு சமுதாயத்தைப் பல நூற்றாண்டுகளாக ஹிம்சைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். பிறகு யோசனை ஏது! எல்லாம் கிளிப் பிள்ளை மயம்.

- பக்கம் 35-36


No comments:

Post a Comment