2020ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘LT9779B’ - கோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

2020ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘LT9779B’ - கோள்

பூமியிலிருந்து, 262 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது‘LT9779B’ எனும் கோள். இது நம் சூரி யக் குடும்பத்தில் உள்ள நெப்டியூன் அளவுக்குப் பெரியது.

இக்கோள் தன்னுடைய சூரி யனுக்கு மிக அருகில் இருப்பதால், வெறும் 19 மணி நேரத்தில் அதனைச் சுற்றி வந்து விடும். இதனுடைய வெப்பநிலை 2,000 டிகிரி செல்சியஸ்.

இக்கோள், 2020ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றாலும் கூட, இக்கோளைப் பற்றிய உண்மைகள் தற்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளன.

இக்கோள் தனது சூரியனிலிருந்து பெறும் ஒளியில், 80 சதவீதத்தை அப்படியே பிரதிபலித்து விடுகிறது. இதனால் இது மிகுந்த பிரகாசத்துடன் உள்ளது.

இதற்குக் காரணம், இந்தக் கோளின் மேகங்கள், டைட்டானியம், சிலிக் கேட்களால் ஆன வையாக இருப்பதே. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்கள் பொதுவாக அதீத வெப்பத்தால் உருகி, ஆவியாகி முழுதும் அழிந்து விடும்.

ஆனால், இந்தக் கோள் அப்படி ஆகவில்லை. இதற்கு இதன் மேகங் களே காரணம். மேகங்கள் சூரியனி லிருந்து வரும் பெரும்பாலான ஒளி யோடு, வெப்பத்தையும் திருப்பி அனுப்பிவிடுவதால் இந்தக் கோள் அதீத சூடேறி ஆவியாகாமல் காக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியைக் கொண்டு இந்தக் கோளின் வளிமண்டலம் பற்றி மேலும் ஆராய உள்ளனர்.

No comments:

Post a Comment