ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை முகாம்களின் மூலம் 1,302 பேருக்கு பணி நியமனம் உதவி இயக்குநர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை முகாம்களின் மூலம் 1,302 பேருக்கு பணி நியமனம் உதவி இயக்குநர் தகவல்

ஈரோடு, ஆக. 26 - ஈரோடு மாவட்ட வேலைவாய்ப் புத்துறை மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 1,302 பேர் தனியார் நிறுவனங் களில் பணி நியமனம் பெற்று இருப்பதாக உதவி இயக்குநர் ராதிகா கூறினார்.

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம் சார் பில் மாவட்டம் தோறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வேலை தேடும், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டு உள்ளார்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ் நாடு அமைச்சர் சு.முத்து சாமி மற்றும் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனையின் பேரில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் 

ஆர்.ராதிகா தலைமையில் தனியார் துறை வேலை வாய்ப்புகள் நடத்தப் பட்டு படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞர் கள், இளம்பெண்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குநர் ஆர்.ராதிகா கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத் தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த முகாம் களில் 321 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்புக்காக பங்கேற்றவர்கள் 4 ஆயி ரத்து 509 பேர். இவர்க ளில் 57 பேர் மாற்றுத்திற னாளிகள். மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கள் மூலம் 1,087 பேர் பணி நியமனம் பெற்று இருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் 18 பேரும் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

இதுதவிர மாதம் தோறும் கடைசி வெள் ளிக்கிழமைகளில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் 4 நடத்தப்பட்டன. இதில் 27 நிறுவனங்களை சேர்ந் தவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர் களை தேர்ந்து எடுத்தனர்.

இந்த முகாம்கள் மூலம் 54 மாற்றுத்திறனா ளிகள் 143 பேர் வேலை வாய்ப்பு பெற்று இருக் கிறார்கள். இவ்வாறு இந்த ஆண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,302 பேர் தனி யார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment