ஹிந்திக்கு எதிரான போராட்டம் தொடங்கிய இந்நாளில் (10.8.1948) இனமானப் பேராசிரியருக்கு சிலைத் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

ஹிந்திக்கு எதிரான போராட்டம் தொடங்கிய இந்நாளில் (10.8.1948) இனமானப் பேராசிரியருக்கு சிலைத் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக.10- தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் இன்று (10.8.2023) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் 10 - ஆதிக்க ஹிந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது. 

இனமானம் காக்கவும் - மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும் - பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது.  கல்வியில் - பகுத்தறிவில் - சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்.

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாவிலன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment