பணியின் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது: காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

பணியின் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது: காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை 4 - பாதுகாப்புப் பணி மற்றும் சாலை களில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் அலை பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர். இதை வலியுறுத்தி, மீண் டும் நேற்று (03.07.2023) ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலி ருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் அலைபேசியைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இக்கவ னச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோயில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவ ரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்கு வரத்தை சரிசெய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது. மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின்போது, காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள காவலர்கள் அலைபேசியைக் கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே, அனைத்து கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் ஆகியோர் அவர வர்களின் கீழ் பணிபுரியும் காவலர்கள் இந்த அறிவுறுத் தல்களை எந்தவித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும், இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகை களிலும் ஒட்டியும், தினமும் காலை ஆஜர் அணிவகுப் பின்போது இதை படித்துக் காட்டியும், இந்த அறிவுரையைக் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதே கருத்தை வலியு றுத்தி காவல்துறை தலைமை இயக்குநரின் சுற்றறிக் கையும் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment