குடிசை மேம்பாட்டுத் திட்­டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பா? மகாராட்டிரா அரசின் செயலால் தமிழர்கள் அச்சம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

குடிசை மேம்பாட்டுத் திட்­டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பா? மகாராட்டிரா அரசின் செயலால் தமிழர்கள் அச்சம்!

மும்பை, ஜூலை19 - தாராவி குடிசை மேம்பாட்டு திட்ட ஒப்பந்­தத்திற்கு அதானி நிறுவனத்திற்கு மகாராட்டிரா அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. 

நாட்டின் வணிக தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசியாவிலேயே அதிகக் குடிசைகளை கொண்ட பகுதியாக அறியப்படும் தாராவி உள்ளது.

இங்குள்ள குடிசைகளை மேம் படுத்தும் திட்டத்தை செயல்படுத்து வதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 259 ஹெக்­டேர் பரப்பு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டு திட்­டமானது ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இந்த திட்­டத்துக்கு அதானி நிறு வனம் ரூ.5069கோடியை முதலீடு செய்கிறது.

இந்த திட்டப்பணிகளை தொடங் குவதற்கு அதானி குழுமத்துக்கு அரசு இறுதி ஒப்புதல் அளித் துள்ளது. இந்த திட்டத்தால் உள் ளூர் வணிகங்களை நம்பியுள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அச்சம் எழுந்துள்ளது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தாராவி மறுசீர மைப்பு திட்­டத்துக்கு அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். வாடகை பணத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவை இடிக்கப்பட்டால் உரிமையாள ருக்கு மட்டும் ஒரு பிளாட் மட் டுமே ஒதுக்கப்படும்.

என்ன செய்வார்கள்? அது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. இந்த பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்­தப்பட்­டது.

உண்மையிலேயே அரசு தாரா வியை மறுசீரமைக்க விரும்பினால், புதிதாக கணக்கெடுப்பு நடத்­தப் பட வேண்டும். கணக்கெடுப்பின் கடைசி நாள் தேதியானது தகுதிக் கான தேதியாக இருக்க வேண்டும். 

2000த்துக்கும் மேற்பட்டோர் இங்கு இட்லி விற்பனை செய்கி றார்கள். முழு நகரத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். மறுசீரமைப் புக்கு பின் இதுபோன்ற வணிகங்கள் இருக்காது. 

தோல் மற்றும் கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடுள்ள சிறு தொழில்கள் முடங்கும்" என தெரிவித்துள்ளனர்.

தாராவிக்கும், தமிழர்களுக்கும் கிட்­டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலான பந்­தம் உள்ளது. தென் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்­தனர். 

இங்குள்ள மக்கள்தொகையில் பெரும்பாலான மக்கள் தமிழர்கள். எனவே, அதானி நிறுவனம் பணி களை தொடங்கும் போது பெரும் பாலும் தமிழ்நாட் டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

இடம் பெயர வேண்டிய கட் டாய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்­தனர். 

அதானிக்கு மகாராட்டிரா அரசின் பரிசு!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி மாநில அரசுகளை எப்படி தங்களது கூட்டாளிகளுக்கு ஏடிஎம் இயந்திரமாக மாற்றி யுள்ளார் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு இது.

பிரதமர் மோடியின் கூட்டா ளிக்கு மகாராட்டிரா அரசு வழங் கும் பரிசுதான் தாராவி திட்டம். மும்பையின் குடிசைவாசிகளின் நிலமும், வாழ்வாதாரமும்கூட 'மோதானியின்' மெகா ஊழலால் விட்டுவைக்கப்படவில்லை" என்­றார்.

No comments:

Post a Comment