மணிப்பூரில் கிறிஸ்தவர்களைத் தாக்குவதா? தேவாலயங்கள் கவுன்சில் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

மணிப்பூரில் கிறிஸ்தவர்களைத் தாக்குவதா? தேவாலயங்கள் கவுன்சில் குற்றச்சாட்டு

இம்பால்,ஜூலை19 - கிறிஸ்தவர்கள் மீது மணிப்பூரில் சட்ட விரோதமாக குடியேறியவர் களால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி தகுதி வழங்க வேண்டும் என மணிப்பூர் மாநில அரசை வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3ஆம் தேதி குகி, நாகா ஆகிய பழங்குடி மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து அம்மாநிலத்தில் வன்முறை சம்ப வங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

ஆயிரக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்த கைய வன்முறை காரணமாக இது வரை 135-க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளதாக அரசுதெரிவித்துள்ளது. 

நூற்றுக்கணக்கானோர் காயம டைந்துள்ளனர். ஆயிரக்கணக்கா னோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கு 50,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் நாள் தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங் கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக் கின்றன.

டில்லியில் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தைக் கண்டித்து மணிப்பூரைச் சேர்ந்த மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தலைவர்கள், நிர்வாகிகள் டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மணிப் பூர் கலவரத்துக்கு மத நோக்கம் மட்டுமே காரணம் இல்லை என் றும், சட்ட விரோதமாக மாநிலத் தில் குடியேறியவர்களால்தான் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன் சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரச் சம்பவங்களுக்கு மத நோக்கம் மட்டுமே காரணமாக இல்லை. மணிப்பூரைச் சேர்ந்தவர் களுக்கும், சட்ட விரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களுக் கும் இடையே நடக்கும் மோதல் தான் இது. 

இந்த மோதலால்தான் மணிப் பூரில் பதற்றம் நிலவுகிறது. சட்ட விரோதமாக குடியேறிய மக்கள் தான் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூரில் அதிகமாக வசிக் கும் இனத்தவர் மட்டுமே, கிறிஸ் தவர்கள் மீது தாக்குதல் நடத்து வதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. பல்வேறு இனத்தவரும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ இனத்தின் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தப்படு கிறது என்பதை உலகுக்கு அறிவிக் கவே நாங்கள் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மைதேயி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ரோஹன்பிலேம் என்பவர் கூறியதாவது:

சட்ட விரோதமாக குடியேறிய வர்கள், எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சினையைத் தீர்க்க அரசு முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment