வாழ்க்கை முறை மாற்றங்களினால் இரைப்பை அலர்ஜி அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

வாழ்க்கை முறை மாற்றங்களினால் இரைப்பை அலர்ஜி அதிகரிப்பு

சென்னை, ஜூலை 31- வாழ்க்கை முறை மாற்றத்தால் ஜீரண மண் டல பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மேம்பட வேண்டும் என் றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.நாராயண சாமி தெரிவித்தார்.

சென்னையில் மெடிந்தியா மருத்துவமனை சார்பில் ‘ஜி.இ. கான்-23’ என்ற ஜீரண மண்டல மருத்துவ மாநாடு ஞாயிற்றுக் கிழமை (30.7.2023) நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், இந்திய  மருத்துவ சங்கம் (தமிழ்நாடு கிளை), இந்திய ஜீரண மண்டல மருத்துவ அமைப்பு, இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமைப்பு, இந்திய மருத்துவர்கள் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், துறைசார் மருத்துவ வல்லு நர்கள், குடும்ப மருத்துவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் அந்நிகழ் வில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உணவுக் குழாய் அமில அரிப்பு பாதிப்பைத் தடுப்பதற்கான ‘ஜெர்ட்-எக்ஸ்’ எனப்படும் நவீன மருத்துவ உபகரணம் அறிமுகப் படுத்தப்பட்டது. அதன் மூலம் உணவுக்  குழாயுடன் இரைப்பையை இணைக்கும் பகுதியை இறுக்கித் தையலிடும் சிகிச்சை அப்போது விளக்கிக் கூறப்பட்டது. 

முன்னதாக, நிகழ்ச்சியில் டாக்டர் கே.நாராயணசாமி பேசிய தாவது:

தமிழ்நாட்டில் ஜீரண மண்ட லம், கல்லீரல் மருத்துவம் பன் மடங்கு மேம்பட்டிருக்கிறது. குடற்புண், தொற்று சார்ந்த ஜீரண மண்டல பாதிப்புகள் முன்பைக் காட்டிலும் குறைந்துள்ளன. அதே போன்று, கல்லீரல் அழற்சியின் சில வகைகள் வெகுவாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் ஹெபடைடிஸ்-பி (மஞ்சள் காமாலை) நோய்க்கான மருந்துகள், தடுப்பூசிகளின் விலை அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் அவற்றை பரிந் துரைக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அவை மாறி பல லட்சக்கணக்கான மதிப்புடைய மருந்துகள் இலவசமாக வழங்கப் படுகின்றன. கல்லீரல் மாற்று சிகிச் சைகளும் அரசு மருத்துவமனை களில் மேற்கொள்ளப்படுகின்றன.

வாழ்க்கை முறை மாற்றத்தால் இரைப்பை அழற்சி பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதுகுறித்த விழிப்புணர்வு மேம்பட வேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து மெடிந்தியா மருத் துவமனை தலைவரும், ஜீரண மண் டல சிகிச்சை நிபுணருமான டாக் டர் டி.எஸ்.சந்திரசேகர் செய்தியா ளர்களிடம் கூறியது:

ஜீரண மண்டல சிகிச்சையில் உள்ள நவீன நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஆண்டு தோறும் இத்தகைய மருத்துவக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. 

நாம் உண்ணும் உணவை செரிக்கவும், உணவை நொதிக்கவும், இரைப்பையில் இயற்கையாக ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. 

இந்த அமிலம், இரைப் பையை அரிக்காமல் இருக்க அதனுள் எபிதீலியம் எனப்படும் திசு கட்டமைப்பு உள்ளது. சில நேரங்களில் இரைப்பைக்குள் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்கு மேல் எழுந்து ஊடுருவும்போது அமில அரிப்பு ஏற்படுகிறது. அதைக் கவனிக்காவிட்டால் ஒரு கட்டத்தில் புற்றுநோயாக மாறக் கூடும்.

வாழ்க்கை முறை மாற்றங்களும், உடல்பருமனும் அமில அரிப்புக்கு முக்கிய காரணம். அதேபோன்று உணவுக் குழாய் தளர்வடையும் போதும் அமிலம் இரைப்பையிலிருந்து ஊடுருவ வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்க எண்டோஸ் கோபி முறையில் ‘ஜெர்ட்-எக்ஸ்’ எனப்படும் நுட்பம் மூலம் உணவுக் குழாயை இறுக்கி தையலிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. இதன் மூலம் 90 சதவீத நோயாளிகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment