பொது சிவில் சட்டம் கபில்சிபல் சரமாரி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

பொது சிவில் சட்டம் கபில்சிபல் சரமாரி கேள்வி

👉 எதைப் பொதுவாக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

👉எல்லா பாரம்பரிய, மதரீதியான வழக்கங்களையும் பொதுவாக்கி ஒன்றாக்கப் போகிறீர்களா?

👉 ஆனால் சட்டப்பிரிவு 13-இன் படி பாரம்பரிய வழக்கங்கள்தான் சட்டம். எப்படி அவற்றை ஒன் றாக்குவீர்கள்?

👉இந்து பிரிக்கப்படாத குடும்பம் என்கிற பிஹிதி வகையை அகற்றி விடுவீர்களா?

👉பல இந்துக்கள் தொழில் செய்வதும் நிலம் வைத் திருப்பதும் பிஹிதி அடிப்படையில்தான். அதை நீங்கள் நீக்கி விடுவீர்களா?

👉கோவாவில் இருக்கும் ஒருவருக்கு 30 வயதாகியும் குழந்தை பிறக்கவில்லை எனில், இன்னொரு திரும ணம் செய்து கொள்ளலாம். அதை நீக்குவீர்களா?

👉 வடகிழக்கு மாநில மக்களின் வழக்கங்களை என்ன செய்வீர்கள்?

👉 என்ன செய்யப் போகிறீர்கள் என ஒரு வரைவை கூட கொடுக்கவில்லையே?

👉 எல்லாவற்றையும் தாண்டி பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக் கூடாது என 2021-இல் சட்ட கமிஷனும் சொல்லியிருக்கிறது.

👉 எந்த அடிப்படையில் பொது சிவில் சட்டம் என பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

மோடி ஆதரவு தொலைக்காட்சியின் நேர்காணலில் கபில்சிபல் சரமாரி கேள்வி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 

No comments:

Post a Comment