சமூக விரோதிகளின் கூடாரம் பா.ஜ.க. அமைச்சர் பி.கே.சேகர்பாபு சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

சமூக விரோதிகளின் கூடாரம் பா.ஜ.க. அமைச்சர் பி.கே.சேகர்பாபு சாடல்

சென்னை,ஜூலை 25 - பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் அயனாவரத்தில் 160 திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மேயர் ஆர்.பிரியா மற்றும் பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அமைச் சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர் களிடம் பேசுகையில்: 

காவல்துறை இந்தாண்டு மட் டும் சமூக விரோதிகள் மீது எடுத் துள்ள நட வடிக்கைகளின் பட்டி யலை பார்த்தால் பாஜகவினரே அதிகமாக இருப்பார்கள். பாஜக சமூக விரோதிகளின் கூடார மாக உள்ளது. தினமும் அவதூறுகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பது, மதவாதத்தைத் தூண் டுவது போன்ற செயல்களில் ஈடு பட்டுள்ளனர். இதனைத் தடுக்க கைது நடவடிக்கை, குற்ற நடவடிக் கைகளை முதலமைச்சர் மேற் கொண்டு வருகிறார்.

தி.மு.க.வினர் மீதும்கூட கைது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

பாஜக மாநில தலைவர் அண்ணா மலை மேற்கொள்ளும் நடைபயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “நூறு அண்ணாமலைகள் வந்தாலும் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

நடைபயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி யுள்ளதால், பாஜகவினர் ஒவ் வொரு மாவட்டங்களிலும் செய்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித் தனத்தை மக்கள் புகார் பெட்டியில் தெரிவிப்பார்கள்” என்று கூறினார். 

சென்னையில் மழைநீர் வடி கால் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “பருவ மழைக்கு தேவையான முன்னெச் சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. மீதமுள்ள 85 கிலோ மீட்டருக்கான மழை நீர் வடிகால் பணிகள் ரூ 248 கோடி மதிப்பீட்டில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பணிகள் முடிக்கப் படாத இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் மழைநீர் தேங் கிய இடங்களை விட இந்தாண்டு 60 சதவிகிதம் வரை குறைக்கப்பட் டுள்ளது. இதனால் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது”  என்றார்.

No comments:

Post a Comment