அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் நல விவரங்கள் பதிவேற்றம்: வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் நல விவரங்கள் பதிவேற்றம்: வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை, ஜூலை 9 தமிழ்நாட்டில் அரசு, உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை, பதிவேற்றம் செய்ய வகுப் பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயின்று வரும் மாணவர்களுடைய உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை, இளம் வயதி லேயே கண்டறிந்து, அதற்கான மருத்துவ பரிசோதனைகளை வழங்கி வருகிறது. இதேபோல், தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ள ஏதுவாக, மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு  TNSED SCHOOL APP Health and wellbeing அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிவதன் மூலம் பிறவிக் குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள், ரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு, விரைந்து உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும்.

மேலும், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், தேவையான நேர்வுகளில் மூக்கு கண்ணாடி போன்ற தகுந்த உபகரணங்கள் வழங்கவும், உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்விவரங்கள் அடிப்படையாக அமை கிறது. எனவே, வகுப்பு ஆசிரியர்கள் அலைபேசி செயலியில் தங்களது 'மிஸ்' அடையாள எண் மற்றும் கடவுச் செல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தங்கள் வகுப்பிற்குரிய மாணவர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை வினாக்களுக்கு உரிய விவரங்கள் பெற்று விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண் டும். இதன் அடிப்படையில், சிறப்புக் கவனம், தொடர் நடவடிக்கை தேவைப் படும் குழந்தைகளுக்கு மிக விரைவாக மருத்துவரின் ஆய்வு மற்றும் பரிசோதனைகள் செய்யப்படும். எனவே, இப் பொருள் சார்ந்து தனிக்கவனத்துடன் செயல்பட்டு, மிக விரைவாக அனைத்து மாணவர்களின் உடல்நலன் சார்ந்து சரியான முதல் நிலை விவரங்களை வகுப் பாசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இதற்கான தகுந்த அறிவுறுத்தல்களை, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்கிட வேண்டும். அலைபேசி செயலியில் மாணவர்களுடைய பெயர், வகுப்பு மற்றும் பிரிவை ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு, அதை சரிபார்த்து செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும். எடை பார்க்கும் கருவி மற்றும் அளவை நாடா ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எடை மற்றும் உயரத்தை கணக்கிட வேண்டும். பதிவுகள் மேற்கொண்ட பின்பு திருத்தம் செய்ய இயலாது. ஆண் ஆசிரியர்கள் மாணவர் களையும், பெண் ஆசிரியர்கள் மாணவி களையும் மட்டுமே சோதனை செய்ய வேண்டும். இப்பணியில் முன்னேற்றத் தினைத் தொடர்ந்து கண்காணித்திடவும், இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால், விரைவில் இப்பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்றிட வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் உத்தர விட்டுள்ளார்.

No comments:

Post a Comment