வெள்ளத்தால் மக்கள் அவதி: வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் உறுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

வெள்ளத்தால் மக்கள் அவதி: வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் உறுதி!

புதுடில்லி, ஜூலை 17  ஜூலை முதல் வாரம் முதலே வட இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மாநிலங் களான இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப், அரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக 10 ஆம் தேதிக்குப் பிறகு டில்லி கிட்டத்தட்ட முழுவதுமே யமுனையில் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது

கடுமையான மழையால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகக் கடந்த ஜுலை 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சுமார் 300 சரக்கு ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களும், 406 பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானச் சேவைகள் பொதுப்போக்குவரத்து என பல நகரங்களில் மக்கள் அப்படியே தங்களின் அன்றாடப்பணிகளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் முடங் கியுள்ளனர். முக்கிய பாலங்கள் முழுமையாக சேத மடைந்துள்ளதால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச்செல்ல முடியாமல் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்த பாதிப்புகளை தலைமைப்பொறுப்பில் இருந்து மீட்கவேண்டிய கடமைகளைச் செய்து - அதிகாரி களையும் அமைச்சர்களையும் ஏவிவிட்டு நிவாரணப் பணிகளை செய்யவேண்டிய பிரதமரோ  பிரான்ஸ் தேசிய நாளில் கலந்துகொள்கிறார். அய்க்கிய அரபு நாடுகளில் உல்லாச சுற்றுப்பயணம் செய்கிறார்.

No comments:

Post a Comment