காவிக் கொடியால் பலியான பக்தர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

காவிக் கொடியால் பலியான பக்தர்கள்!

அகர்தலா, ஜூலை 17 திரிபுராவில் 29.6.2023 அன்று இஸ்கான் அமைப்பினர் நடத்திய தேர்த் திருவிழாவில் தேரின்  மேல்பகுதி மின் கம்பியில் உரசியதால் மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட  12 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 16-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். 

 இந்தக் கோரவிபத்து குறித்து விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது, அதில் தேரின் மேல் பகுதியில் உயரமான இரும்புக் கம்பியில் காவிக்கொடி கட்டப்பட்டிருந்ததால், அந்தக் காவிக்கொடி கட்டிய கம்பி உயரழுத்த மின் சாரக் கம்பியில் பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது  திரி புரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் என்ற பகுதியில் இஸ்கான் அமைப்பினர் ஜகநாதர் கோவிலில் ரத ஊர் வலம் நடத்தினர். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பிரும் அப்பகுதியில் உள்ள  ஹிந்து அமைப்பினரும் 10 நாள் தேரை ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி இழுத்து வந்தனர். 

இந்த நிலையில் கடைசி நாளான 29.6.2023 அன்று தேரை மீண்டும் கோவிலுக்குக் கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது. தேரை சிறியவர், பெரியவர் என பலர் வடம் பிடித்து இழுத்து வந்த போது, மேல்பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கோரவிபத்தில் பல நூறு பேர் திரண்டு இருந்தும் தேரில் இருந்த குழந்தைகளும், பெண்களும் காப் பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டும், யாருமே காப்பாற்ற முன்வரவில்லை. தேரைச் சுற்றிலும் தீப்பிடித்திருந்தது; மேலும் தேரில் மின்சாரம் பாய்ந்துகொண்டு இருந்ததால் யாருமே அங்கு செல்லமுடியவில்லை. பலர் பொதுமக்கள் கண் முன் எரிந்து சாம்பாலாயினர்.

இந்த விபத்து குறித்து துறை ரீதியில் விசாரணை நடத்தி விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மின் சாரத்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், ''திரிபுரா ஸ்டேட் எலக்ட்ரிசிட்டி கார்ப்பரேசன் லிமிட்''-டின் டிஜிஎம்-க்கு உத்தரவிட்டார்,  இந்நிலையில் விசாரணையின் முதல் கட்ட அறிக்கையை உள்ளூர் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது, சமூக வலைதளத்தில் படத் தோடு வெளியிட்ட அந்தச்செய்தியில் 29.6.2023 அன்று ஹிந்து அமைப்பினர் தேரின் மேல் பகுதியில் காவிக்கொடியை ஏற்றினர். இத்தனை நாள்களாக தேர் அதே பகுதியில் இரண்டு முறை சென்று வந்துள்ளது, அப்போது எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை. 

 இந்த நிலையில் ஹிந்து அமைப்பினர் தேரின் கும்பம் போன்ற பகுதியில் மேலும் உயரமாக இரும்புக்க ம்பியில் இணைக்கப்பட்ட காவிக்கொடியை கட்டியுள்ளனர். இந்தக் கொடியோடு தேர் சாலையைக் கடக்கும் போது, மேலே சென்ற உயரழுத்த மின்சார வயரில் உரசியது, மிகவும் அதிக சக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்ததால் கம்பி அதீத வெப்பத் தில் உயரழுத்த மின்சார வயரோடு ஒட்டிக் கொள்ள மின்சாரம் தொடர்ந்து தேரில் பாய்ந்து கொண்டே இருந்தது. இதனால் தேரில் இருந்த வர்களும், தேரை இழுத்தவர்களும் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து உயிரிழந்தனர்.  இந்த விபத்து குறித்த அறிக்கை அரசிடம் இந்த வாரம் அளிக்கப்படும். அதன் பிறகு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரிய வரும்.

                                   மின்சார வயரில் உரசும் காவிக்கொடி

15.6.2023 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காவடி எடுத்துச் சென்றவர்கள்மீது மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழந்தனர் இதற்கும் காவடி எடுத்துச் சென்றவர்கள் வாகனத்தில் உயரமாக கட்டியிருந்த காவிக்கொடி தான் காரணம் என்பது காட்சிப் பதிவில் உறுதியான நிலையில், திரிபுராவில் நடந்த விபத்திற்கும் காவிக்கொடிதான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment