மணிப்பூர் கலவரம் : அமித்ஷாவை கண்டித்து மிசோரம் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

மணிப்பூர் கலவரம் : அமித்ஷாவை கண்டித்து மிசோரம் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பதவி விலகல்

இம்பால், ஜூலை 16   மணிப்பூர் மாநிலத் தில் சமீபத்தில் வெடித்த இனக்கலவரத் தின் போது, 357  கிறிஸ்தவ சர்ச்சுகள், பாதிரியார்களின் குடியிருப்புகள் மற்றும் சர்ச்சுகளுக்குச் சொந்தமான அலு வலக கட்டடங்கள் மெய்தி போராளிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. சர்ச்சுகள் எரிக்கப்பட்டதை மணிப்பூர் மாநில முதலமைச்சர் கண்டிக்கவில்லை அதே போல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம் பாலுக்கு வந்தபோது சர்ச்சுகள் எரிக்கப்பட்டது குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த  செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மிசோரம் மாநில பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்து உட னடியாக  விலகுகிறேன் என்று வன்ரம்ச் சுவாங்கா தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு இந்த மாநிலங்களின் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து பாஜக துணைத் தலைவர் பதவி விலகியிருப்பது பாஜக-வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment