மாணவ - மாணவிகள் அதிகம் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

மாணவ - மாணவிகள் அதிகம் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா!

மதுரை, ஜூலை 11 -  மதுரையில் கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் ஜூலை 15ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி, பந்தல் அமைத்தல், பாதுகாப்பு, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை - நத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா ஜூலை 15இல் நடக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்கும் விதமாக விழா ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. 

நூலகக் கட்டடம் அருகிலுள்ள மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழாவிற்கான மேடை, பந்தல் அமைக்கப் படுகிறது. ஏற்கெனவே, மைதானத்திலுள்ள பார்வை யாளர் கேலரிப் பகுதிக்கு முன் பகுதியில் மேடை அமைக்கப்படுகிறது. மதுரை மட்டுமின்றி, தென்மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப் படுகிறது என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் மேற்கொள் ளப்பட்டுள்ளது. விழா நடக்குமிடம், மைதானம், நூலகப் பகுதியில் முன்கூட்டியே வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் நிறுத்தப்படுகின்றனர்.

கட்சியினரைவிட மாணவ, மாணவிகள் அதிகமாக பங்கேற்க திட்டமிடுபடுகிறது. இதனிடையே, முதல மைச்சர் வருகை மற்றும் விழா நடக்கும் பகுதியிலும் எவ்வாறு பாதுகாப்பு மேற்கொள்வது என பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment