ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை,ஜூலை 21 - ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

ஒன்றிய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது:

தமிழ்நாடு அரசு சட்டத்தில் கூறப்பட் டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்தி ருக்கிறது. ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முடியாது.

ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன் லைன் விளையாட்டுக்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளை யாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவ தற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன்பு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துக் களை கோரவில்லை. முறையான விசா ரணை நடத்தாதது பாரபட்சமானது" என்று என்று ஒன்றிய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது. ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள்தான் கொண்டு வந் ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை. மாநில அரசுகளின் உரிமைகளின் அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உருவாக்கப்பட்டது. நேரடியாக விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கு நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment