திருப்பூர் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் - அவிநாசியில் பெரியார் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

திருப்பூர் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் - அவிநாசியில் பெரியார் பயிற்சிப் பட்டறை

அவிநாசி,ஜூலை 20 - திருப்பூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.07.2023 அன்று முற்பகல்11  மணியளவில் அவிநாசி கோவம்சத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் யாழ். ஆறுச் சாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் ப.குமர வேல், மாவட்டத் துணைத் தலை வர் முத்து. முருகேசன், அவிநாசி ப.க தலைவர் ஆசிரியர் க.அங்க முத்து ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்

திருப்பூர் மாவட்ட அமைப் பாளர் அவிநாசி ஆசிரியர் அ. ராம சாமி நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.

பெரியார் புத்தக நிலைய பொறுப் பாளர் மைனர், வீரமுத்து கருப்பு சட்டை பழனிச்சாமி, முத்து.சரவ ணன், வீரப்பன், ராமு உள்ளிட் டோர் உரையாற்றினர்.

திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர்  இரா.ஜெயக்குமார் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக் கங்களை விளக்கியும் மாநகராட்சி பகுதி கழகங்களை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக்கம் அதன் இறுதி இலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பு,  குறித்தும் உரை நிகழ்த்தினார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி.குமாரராஜா இறுதியாக கருத்துரையாற்றினார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப்பாளர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அறிவித்தார்.

சுதன்ராஜ்  நன்றி உரையாற்றினார்.

6.7.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமை யில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், வைக் கம் போராட்ட நூற்றாண்டு கலை ஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டங்களை திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி களிலும் நடத்துவது எனவும், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முடிவடைந்த விடுதலை சந்தாவை புதுப்பித்து புதிய சந்தாக்களை சேர்த்து வழங்குவது என வும், 2023 அக்டோபர் மாதத்தில் திருப்பூர் மாவட்ட திராவிடர் கழ கம் சார் பில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அவிநாசியில் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது. திருப்பூர் மாநகராட்சி களின் வார்டுகளில் கீழ்கண்டவாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப் புகள் அமைக்கப்படுகிறது. கீழ்கண்டவர்கள் பகுதி கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப் படுகிறார்கள்.


திருப்பூர் மாவட்ட திராவிடர்கழகம்

மாவட்டக் காப்பாளர்: ஆசிரியர் அ. இராமசாமி

மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி

மாவட்டச் செயலாளர் ப.குமரவேல்

மாவட்டத் துணைத் தலைவர். முத்து. முருகேசன்

பொதுக்குழு உறுப்பினர்கள்: இரா.ஆறுமுகம்,இல. பாலகிருஷ்ணன்

திருப்பூர் மாநகர திராவிடர்கழகம்

மாநகரத் தலைவர் : ப.மா.கருணாகரன்

மாநகர செயலாளர் :பெ.செல்வராசு

மாநகர துணைத் தலைவர்:கு.லெனின் குமார்

மாநகரத் துணைச் செயலாளர் பா.குரு பாரதி

திருப்பூர் மாநகர பகுதி கழக புதிய பொறுப்பாளர்கள்

1, திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதி திராவிடர் கழகம் (12வார்டுகள்) 

வார்டு 1 முதல் 12வரை.

பகுதி கழக தலைவர்: அம்மாபாளையம் கணேசன்

பகுதி கழக செயலாளர்: நா.சுதன்ராஜ்

2, திருப்பூர் கொங்கு நகர்பகுதி திராவிடர் கழகம் (12வார்டுகள்) 

வார்டு 13  முதல் 24வரை.

பகுதிக் கழக தலைவர்: ஆசிரியர் சி. முத்தையா

பகுதி கழகச் செயலாளர்: மு.அன்பழகன்

3, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதி திராவிடர் கழகம் (12 வார்டுகள்)

வார்டு 25 முதல் 36 வரை.

பகுதி கழகத் தலைவர்:க.மைனர்

பகுதிகழக செயலாளர்:அ.கலையழகன்

4, திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி திராவிடர் கழகம்(12வார்டுகள்)

வார்டு 37முதல் 48 வரை.

பகுதி கழகத் தலைவர்:ஆட்டோ தங்கவேல்

பகுதி கழக செயலாளர்: மயில்மணி

No comments:

Post a Comment