செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க ஆணையிட உயர்நீதிமன்ற மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க ஆணையிட உயர்நீதிமன்ற மறுப்பு

சென்னை, ஜூலை 26 - செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ர வர்த்தி அமர்வு மனுவை விசாரித் தது. செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக் குரைஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத் துறை சார்பில் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜ ராகினர்.

இதில், செந்தில் பாலாஜியை காவ லில் வைத்து விசாரிக்க வேண் டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத் தில்  வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை வேறு நாளுக்கு ஒத்திவைக்கலாம் என வழக்குரை ஞர் இளங்கோ தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவ லில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற தனது தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையில் எடுத்த பின், நாங்கள் ஏன் வழக்கை நிலு வையில் வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வியெழுப் பினர். அனைத்து அம்சங் களையும் உச்சநீதிமன்றம் முடி வெடுக்கும் போது, இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்றும், உச்சநீதி மன்றம் இந்த வழக்கில் முடிவெடுக் கட்டும் என்றும் நீதி பதிகள் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. அத்துடன், செந்தில் பாலாஜி வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


No comments:

Post a Comment